T20 உலக கிண்ணம் - இலங்கையை வீழ்த்தி முதலிடம் பிடித்த ஜிம்பாப்வே
2026 உலக கிண்ணத்தின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதியது.
இலங்கையை வீழ்த்திய ஜிம்பாப்வே
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக இலங்கை தரப்பில் பதும் நிசங்க 41 பந்துகளில் 61 ஓட்டங்கள் குவித்தார்.
179 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தோல்வியே காணாத ஜிம்பாப்வே
அதிகபட்சமாக ஜிம்பாப்வே தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் பென்னட் 48 பந்துகளில் 63 ஓட்டங்கள் குவித்தார்.
26 பந்துகளில் 45 ஓட்டங்கள் குவித்த ஜிம்பாப்வே அணித்தலைவர் சிக்கந்தர் ரசா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியுள்ள ஜிம்பாப்வே அணி, 7 புள்ளிகளுடன் B பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த தொடரில், ஜிம்பாப்வே விளையாடிய 4 போட்டிகளில் ஓமன், அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய 3 அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்திற்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்படட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |