முன்னாள் கேப்டன் 49 வயதில் புற்றுநோயால் மரணம்! அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் தனது 49வது வயதில் காலமானார்.
ஹீத் ஸ்ட்ரீக்
1990 முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய ஹீத் ஸ்ட்ரீக் தலைசிறந்த பந்துவீச்சாளராக இருந்துள்ளார்.
தனது அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகளில் 1990 ஓட்டங்கள், 216 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். அதுபோலவே 189 ஒருநாள் போட்டிகளில் 2943 ஓட்டங்கள் மற்றும் 239 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் என்ற பெருமை அவரேயே சேரும்.
Streaky ?
— Sean Williams (@sean14williams) August 22, 2023
No words can explain what you and your family have done for mine and many others
Our hearts our broken you leave behind a beautiful family and a legacy for us to live up to!
You will be missed we love you dearly
Rest in peace streaky ? pic.twitter.com/2sXz4WNqu7
மேலும் ஜிம்பாப்வே, வங்கதேசம் சர்வதேச கிரிக்கெட் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில் இவர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மரணம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது தனது 49வது வயதில் உயிரிழந்துள்ளார். இவருக்கு பலரும் தனது இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Heath Streak is no more. Sad!! Really sad. #RIP
— Ashwin ?? (@ashwinravi99) August 23, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |