வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற ஜிம்பாப்வே
டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி
ஜிம்பாப்வே சென்றுள்ள வங்கதேச அணி, ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 T20 அடங்கிய தொடரில் விளையாட உள்ளது.
கடந்த 28 ஆம் திகதி தொடங்கிய டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய வங்கதேச அணி, ஜிம்பாப்வேவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 140 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

அதிகபட்சமாக மொமினுல் ஹக் 60 ஓட்டங்களும் ஷத்மான் இஸ்லாம் 20 ஓட்டங்களும், ஷான்டே 19 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் நியூமேன் நியாம்ஹுரி அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 410 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

அதிகபட்சமாக இன்னசென்ட் 140 ஓட்டங்களும், வெஸ்லி மாதேவெரே 77 ஓட்டங்களும், கிரேக் எர்வின் 60 ஓட்டங்களும், பிரையன் பென்னெட் 59 ஓட்டங்களும் எடுத்தனர்.
வங்கதேச வீரர் தைஜுல் இஸ்லாம் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

270 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், வெறும் 185 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

வங்காளதேசத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஜிம்பாப்வே தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |