22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தில் முதல் டெஸ்ட்! ஜிம்பாப்பே அணி அறிவிப்பு
ஜிம்பாப்பே கிரிக்கெட் அணி 22 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டி விளையாட உள்ளது.
நான்கு நாள் டெஸ்ட்
இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
வருகிற 22ஆம் திகதி தொடங்க உள்ள இந்த டெஸ்ட் போட்டிக்கான இரு அணி வீரர்களின் விபரமும் வெளியானது.
2003ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் ஜிம்பாப்பே அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வென்ற உத்வேகத்துடன் ஜிம்பாப்பே அணி இதில் களமிறங்குகிறது.
சிக்கந்தர் ரஸா
ஜிம்பாப்பே அணியில் ஜோனாதன் கேம்ப்பெல்லுக்குப் பதிலாக, நட்சத்திர ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ரஸா திரும்பியுள்ளார்.
கிரேக் எர்வின் (Craig Ervine) தலைமையிலான ஜிம்பாப்பே அணியில் பென் கர்ரன், சியான் வில்லியம்ஸ், வெல்லிங்டன் மஸகட்சா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமை தங்குகிறார். ஜோ ரூட், ஹாரி ப்ரூக் போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |