மாயாஜால சுழற்பந்தில் ஜிம்பாப்பேயை அலறவிட்ட இந்திய வீரர்! 116 ரன் இலக்கு
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20யில் ஜிம்பாப்பே அணி 115 ஓட்டங்கள் எடுத்தது.
முகேஷ் குமார் கொடுத்த அதிர்ச்சி
இந்தியா - ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
Mukesh Kumar cleans up Innocent Kaia in his first delivery ??
— Sportskeeda (@Sportskeeda) July 6, 2024
Golden duck for Zimbabwe opener Innocent Kaia!?#MukeshKumar #ZIMvIND #T20Is #Sportskeeda pic.twitter.com/phXt4ej5gt
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்பே அணிக்கு இரண்டாவது ஓவரில் முகேஷ் குமார் அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் இன்னொசென்ட் கையா கிளீன் போல்டு ஆனார்.
ஓரளவு நின்று ஆடிய பிரையன் பென்னெட் 22 ஓட்டங்களும், மதேவேரே 21 ஓட்டங்களும் எடுத்த நிலையில் ரவி பிஸ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
பிஸ்னோய் 4 விக்கெட்
அதன் பின்னர் வந்த அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா 17 ஓட்டங்களில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
எனினும் கிளிவ் மடன்டே அதிரடியாக ஆடி 25 பந்தில் 4 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய ஜிம்பாப்பே அணி 9 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணியின் தரப்பில் பிஸ்னோய் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
India restrict Zimbabwe to 115/9 in the first T20I ?#ZIMvIND | ?: https://t.co/1SXngLlfHo pic.twitter.com/vfxllVdUkN
— ICC (@ICC) July 6, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |