மிரட்டிய சுப்மன் கில், ருதுராஜ் ஜோடி: ஜிம்பாப்வே-வை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இந்தியா
இந்தியா-ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
A captain's knock from @ShubmanGill ?#SonySportsNetwork #ZIMvIND #TeamIndia pic.twitter.com/3TBFEgNFrt
— Sony Sports Network (@SonySportsNetwk) July 10, 2024
கேப்டன் கில் 66 ஓட்டங்களும், ருதுராஜ் கெய்க்வாட் 49 ஓட்டங்களும் எடுத்து அணியின் அதிகபட்ச ஓட்டங்களை குவித்த வீரர்களாக விளங்கினர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 182 ஓட்டங்களை குவித்தது.
ஜிம்பாப்வே தடுமாற்றம்
183 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கியது.
? to ? wins in Harare ?
— BCCI (@BCCI) July 10, 2024
A 23-run victory in the 3rd T20I as #TeamIndia now lead the series 2⃣-1⃣ ??
Scorecard ▶️ https://t.co/FiBMpdYQbc#ZIMvIND pic.twitter.com/ZXUBq414bI
தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி இந்திய பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர்.
டியோன் மையர்ஸ் மட்டும் தனியாக 65 ஓட்டங்கள் எடுத்து ஜிம்பாப்வே அணிக்கு சிறிது நம்பிக்கை அளித்தார்.
இருப்பினும், மற்ற வீரர்களால் சொல்லும்படியான ஓட்டங்களை எடுக்க முடியவில்லை.
இதனால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஜிம்பாப்வே அணி தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |