உலக சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது ஜிம்பாப்வே- சிக்கந்தர் ராஸா புதிய சாதனை
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் உலக சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழத்து அதிர்ச்சி கொடுத்தது ஜிம்பாப்வே.
இந்தியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது.
இத்தொடரில் பங்கேற்க ஏற்கனவே 8 அணிகள் தெரிவாகியுள்ள நிலையில் மிஞ்சியுள்ள 2 அணிகள் தகுதிச்சுற்று மூலம் தெரிவு செய்யப்படவுள்ளது.
இதற்கான போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது.
குழு ஏ பிரிவில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.
குழு பி பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, அயர்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும்.
இதற்கான போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது, குரூப் ஏ பிரிவில் மேற்கிந்திய தீவுகள் அணியும், ஜிம்பாப்வேயும் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, சீரான இடைவெளியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக மைக் மேயர்ஸ் 56 ஓட்டங்களும், ராஸ்டன் சேஸ் 44 ஓட்டங்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர், இதனால் சூப்பர் 6 பிரிவுக்கு ஜிம்பாப்வே, நெதர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறியுள்ளது.
சிக்கந்தர் ராஸா சாதனை
இந்த போட்டியில் 68 ஓட்டங்கள், 2 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார் சிக்கந்தர் ராஸா.
ஜிம்பாப்வே அணிக்காக 132 போட்டிகளில் விளையாடிய இவர் 11 ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
குறைந்த போட்டிகளில் இத்தனை முறை விருதை வென்ற சிக்கந்தர் ராஸாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர் பலரது கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |