வெற்றிக்காக போராடி சதமடித்த 20 வயது ஆப்கான் வீரர்: தொடரை வென்ற ஜிம்பாப்வே
Zimbabwe won test series against afghanistan: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஜிம்பாப்வே வென்றது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜிம்பாப்வே தொடரை வென்றது.
418 ஓட்டங்கள் இலக்கு
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடந்தது.
முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 339 ஓட்டங்களும், ஆப்கானிஸ்தான் 217 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே 295 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அடுத்து 418 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் ஆப்கானிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், அணித்தலைவர் ரஹ்மத் ஷா 30 ஓட்டங்களும், ஷாஹிதி 35 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
இக்ரம் அலிக்கில் 26 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அப்ஸர் ஸஸாய் மற்றும் நசீர் கான் கூட்டணி 114 ஓட்டங்கள் குவித்தது. அப்ஸர் ஸஸாய் (Afsar Zazai) நிதானமாக ஆடி 87 ஓட்டங்கள் குவிந்திருந்த நிலையில் முஸரபாணி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நசீர் கான்
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், 20 வயது வீரரான நசீர் கான் (Naseer Khan) தனியாளாக வெற்றிக்காக போராடி முதல் சதம் அடித்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 360 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, ஜிம்பாப்வே 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அரைசதம் விளாசியதுடன் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய பிளெஸ்ஸிங் முஸரபாணி ஆட்டநாயகன் விருதும், 382 ஓட்டங்கள் குவித்த பிரெண்டன் டெய்லர் (Brendan Taylor) தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

