தோல்வி அடைந்த பஞ்சாப் அணி - நடிகை ப்ரீத்தி ஜிந்தா செஞ்ச வேலையைப் பாருங்க...!
தோல்வி அடைந்த பஞ்சாப் அணியை உற்சாகப்படுத்தயி நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை ப்ரீத்தி ஜிந்தா செய்த செயல்
போட்டியில் பஞ்சாப் அணியின் சிறு சிறு முன்னேற்றத்தையும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அதிகமாக கொண்டாடி ரசிகர்களையும், அணி வீரர்களை உற்சாகப்படுத்துவார். அதேபோல் வெற்றிபெற்ற பிறகு பஞ்சாப் வீரர்களை நேரில் சந்தித்து கைகொடுத்து பாராட்டு தெரிவிப்பார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. ஆனால், நடிகை ப்ரீத்தி ஜிந்தா ரசிகர்களுக்கு இலவசமாக அந்த அணியின் டி.ஷர்ட்டை வீசி எறிந்தார். டி.ஷர்ட்டை பிடித்த ரசிகர்கள் அணிந்துக் கொண்டனர்.
இப்படி ப்ரீத்தி செய்த செயல் பஞ்சாப் அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்தது. அதேபோல் நேற்று போட்டிக்கு பின் குஜராத் அணி வீரர்களையும் சந்தித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா அவர்களை பாராட்டினார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பஞ்சாப் அணிக்காக ஆடிய ஷமியை சந்தித்து சில நிமிடங்களில் உரையாற்றினார் ப்ரீத்தி.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதிரணி வீரர்களையும் ப்ரீத்தி ஜிந்தா சந்தித்து பாராட்டியுள்ளதை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Preity Zinta is like an old fine wine? pic.twitter.com/AkezDK0tYA
— Wellu (@Wellutwt) April 13, 2023
Preity Zinta given Punjab Kings jersey to Fans.pic.twitter.com/itC1BT3A6D
— CricketGully (@thecricketgully) April 14, 2023