பிரித்தானியாவில் ஜிப்கார் சேவைகள் நிறுத்தம்: டிசம்பர் 31ம் திகதி கடைசி நாள்!
இந்த ஆண்டின் இறுதிக்குள் பிரித்தானியாவில் செயல்பாடுகளை நிறுத்த ஜிப்கார்(Zipcar) சேவைகள் திட்டமிட்டுள்ளன.
ஜிப்கார் சேவைகள் நிறுத்தம்
பிரித்தானியாவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து செயல்பாடுகளையும் முடித்து கொள்ள அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஜிப்கார் கார் பகிர்வு சேவைகள் திட்டங்களை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானியாவில் உள்ள தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் ஜிப்கார் சேவைகள் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளது.

இதன் ஒருப் பகுதியாக டிசம்பர் 31ம் திகதிக்கு பிறகு புதிய முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜிப்கார் சேவைகள் திட்டமிட்டுள்ளது.
2024 ம் ஆண்டின் இறுதி நிதிநிலை அறிக்கையின் படி, பிரித்தானிய கிளையில் மொத்தம் 71 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வரை(அதாவது டிசம்பர் 31ம் திகதி) பிரித்தானிய பயனர்கள் ஜிப்கார் சேவைகளை பயன்படுத்த முடியும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |