தோனியின் மகளுக்காகவாவது CSK ஜெயித்திருக்கலாம்! வைரலாகும் ஜிவா தோனியின் கியூட் புகைப்படங்கள்!
திங்கட்கிழமை இரவு நடந்த ஐபிஎல் போட்டியில், சென்னை அணி வெற்றிபெறவேண்டும் என்பதற்காக தோனியின் மகள் கடுமையாக வேண்டிக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 50-வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததைடுத்து, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 136 ஓட்டங்கள் எடுத்தது.
அதனைத்தொடர்ந்து, களமிறங்கிய டெல்லி அணி 19.4 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழத்தி புள்ளிப்பட்டியலில் டெல்லி முதல் இடத்தை பிடித்தது. இந்த போட்டி விறுவிறுப்பான ஆட்டமாக இருந்தது.
சிஎஸ்கே அணி வெற்றி பெறவில்லை என்றாலும், கேப்டன் எம்எஸ் தோனியின் மகள் ஜிவா தோனியின் (Ziva Dhoni) புகைப்படங்கள் வைரலாகின.
Ziva is praying for csk
— CRICKET home (@Cricrush1) October 4, 2021
One of cutest moment in whole IPL 2021#ipl2021 #cskvsdc pic.twitter.com/ufuitczBUE
5 வயதே ஆகும் ஜிவா, தனது தந்தையின் அணி வெற்றிபெறவேண்டும் என்பதற்காக கண்களை மூடி, கைகூப்பி கடுமையாக இறைவனிடம் வேண்டிக்கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.
சென்னை அணி தோல்வியை தழுவினாலும், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஜிவாவின் புகைப்படங்கள் ஆதரவாக இருந்தன. மேலும் சில ரசிகர்கள், ஜிவாவின் வேண்டுதலுக்காகவாவது சென்னை அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றிருக்கலாம் என கூறிவருகின்றனர்.
Pls win this for Ziva??❤️ #CSKvsDC pic.twitter.com/dyKUyX1aIs
— Raja VJ ツ (@rajavjoff) October 4, 2021