அட்சய திருதியை நாளில் 12 ராசிக்காரர்களும் இதை செய்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்!

zodiac akshaya tritiya
By Kishanthini May 14, 2021 07:44 AM GMT
Report

அட்சய திருதியை நாளானது தங்கம், ஆபரணங்கள், நகைகள், வெள்ளி மற்றும் பாத்திரங்களை வாங்குவதற்கான புனிதமான நாளாக கருதப்படுகிறது.

இந்த நன்நாளில் ஜோதிட ரீதியாக, ஒவ்வொருவரும் தங்களின் ராசிக்கேற்ப குறிப்பிட்ட பொருட்களை தானமாக வழங்குவது நல்லது.

அந்தவகையில் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் பருப்பு வகைகள், கோதுமை, சிவப்பு மலர்கள், சிவப்பு உடைகள் மற்றும் காப்பர் போன்றவற்றை தானமாக வழங்குவது நல்லது. இதனால் அதிர்ஷ்டம் இவர்களைத் தேடி வரும். அதோடு மாங்கல்ய தோஷம் நீங்கும், தன்னம்பிக்கை மேம்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று பசுக்கள், கன்றுகள், வைரங்கள், அரிசி, வாசனை திரவியம் மற்றும் நீல நிற உடைகளை தானமாக வழங்குவது நல்லது. இதனால் இவர்களின் காதல் வாழ்க்கை மேம்படும் மற்றும் திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும். 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் பருப்பு வகைகள், மரகதம், தங்கம், பச்சை நிற ஆடைகள், காய்கறிகள், மணி பிளாண்ட் போன்ற தாவரங்களை தானமாக அட்சய திருதியை நாளில் வழங்குவது நல்லது.

 கடகம்

கடக ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று சர்க்கரை, அரிசி, நெய், பால், தயிர், தண்ணீர், வெள்ளி, வெள்ளை நிற உடைகள் மற்றும் முத்துக்களை தானமாக வழங்கினால், அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருகுவதோடு, மனச்சோர்வு மற்றும் மனநோயைக் கட்டுப்படும்.

 சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சிவப்பு நிற உடைகள், குங்குமம், மெழுகுவர்த்தி, கற்பூரம், காப்பர், வெல்லப்பாகு மற்றும் பாத்திரங்களை தானமாக வழங்குவது மிகவும் நல்லது. இதனால் சமூகத்தில் அவர்களின் பெயர், புகழ் மேம்படுவதோடு, அங்கீகாரமும் கிட்டும். 

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் காய்கறிகள், தாவரங்கள், பச்சை நிற உடைகள், பச்சை நிற வளையல்கள், புத்தகங்கள், விதைகள் மற்றும் உணவுப் பொருட்களை தானமாக வழங்குவது வருடம் முழுவதும் அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

  துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வாசனை திரவியம், பால் பொருட்கள், நீல நிற உடைகள், நீல நிற வளையல்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சந்தனம் போன்றவற்றை தானமாக வழங்குவது நல்லது.

 விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் குங்குமம், சிவப்பு நிற வளையல்கள், லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், சந்தனம், குங்குமப்ழு, சிவப்பு நிற உடைகள் மற்றும் மலர்களை தானமாக வழங்குவது நல்லது. இதனால் வாழ்வில் உள்ள தடைகளை விலகும் மற்றும் மாங்கல்ய தோஷமும் நீங்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் மத புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருட்கள், மஞ்சள் நிற உடைகள், பாத்திரங்கள், புஷ்பராகம், மலர்கள் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை தானமாக வழங்குவது நல்லது.

இது வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வைப் பெறும் அதிர்ஷ்டத்தை வழங்கும். மேலும் வியாபாரம் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி காணவும் உதவும். 

  மகரம்

மகர ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று எண்ணெய், இரும்பு பாத்திரங்கள், கருப்பு நிற உடை, காலணிகள், பேனா, ஃபேன் போன்றவற்றை தானமாக வழங்குவது வாழ்வில் வெற்றி காண உதவும்.

 கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் கடுகு எண்ணெய், தேங்காய் நீர், பாத்திரங்கள், குடை, போர்வை, காலணிகள் மற்றும் ஏழு தானியங்களை அட்சய திருதியை அன்று தானமாக வழங்குவது நல்லது. 

  மீனம்

மீன ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் கொண்டைக்கடலை பருப்பு, தங்கம், குங்குமப்பூ, புத்தகம், சீருடை மற்றும் மஞ்சள் ஆகிய பொருட்களை தானமாக வழங்குவது, வாழ்வில் செல்வ செழிப்புடன் இருக்க உதவும்.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US