2021 பிப்ரவரி மாதத்தில் மகர ராசியில் ஆறு கிரக சேர்க்கை! எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

Astrology Zodiacal prediction for February
By Balakumar Feb 02, 2021 08:40 PM GMT
Report

தை மாதம் முடிந்து பிப்ரவரி மாத தொடங்கியுள்ளது. இம்மாத்தில் ஆறு கிரகங்களில் சேர்க்கை நடைபெற போவதால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமும், சில ராசிக்காரர்களுக்கு பாதகத்தையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது 12 ராசிக்குமான பலன்களை இங்கு பார்ப்போம்.

  • கிரகப்பெயர்ச்சிபிப்ரவரி மாதத்தில் 13ஆம் சூரியன் மகரம் ராசியிலும் கும்பம் ராசியிலும் பயணம் செய்கிறார்.
  • புதன் கும்பம் ராசியில் வக்ரமடைகிறார்.
  • செவ்வாய் மேஷம் ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி ரிஷபம் ராசியில் உள்ள ராகு உடன் இணைகிறார்.
  • கேது விருச்சிகம் ராசியில் பயணம் செய்கிறார்.
  • 21ஆம் தேதி செவ்வாய் ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
  • சுக்கிரன் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

மேஷம்

பிப்ரவரி மாதத்தில் மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கார். செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால் எண்ணங்கள் நிறைவேறும். இது தெளிவான மாதம். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

புதன் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். சூரியன் மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். சுக்கிரன் மாத இறுதியில் கும்ப ராசிக்கு மாறுகிறார்.

திருமணம் சுப காரிய முயற்சிகள் நடைபெறும். குருவின் பார்வை செவ்வாய் ராகுவின் மீது விழுகிறது. தேவையான பண வரவு கிடைக்கும். குருவின் பார்வையை நன்மையை கொடுக்கும்.

வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பத்தாம் வீட்டில் சூரியன், குரு, சனி, சந்திரன், புதன்,சுக்கிரன் ஆகிய <கிரகங்கள் இணைகின்றன. கர்ம ஸ்தானத்தில் ஆறு கிரங்கள் இணைகின்றன. வேலை, தொழில் மாற்றங்கள் ஏற்படும்.

நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நடைபெறும். செவ்வாய் ராசியில் இருந்து இடம் மாறி ரிஷபத்தில் உள்ள ராகு உடன் இணைகிறார். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும்.

பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விசயங்களில் கவனம் தேவை.

அலர்ஜி பிரச்சனைகள் வரலாம் எச்சரிக்கை தேவை. குடும்ப பெண்களின் ஆசைகள் நிறைவேறும். பத்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைந்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் கிரகங்களின் கூட்டணி அமோகமாக அமைந்துள்ளது.

சுக்கிரன் சனி சேர்க்கை இணைந்துள்ளது ராஜயோகம். சூரியன் சுக்கிரன், புதன் இணைந்து ராஜயோகத்தை தருகிறது. சுகம் சௌக்கியம் அதிகரிக்கும். யோகமான மாதமாக அமைந்துள்ளது.

ஒன்பதாம் வீட்டில் உள்ள குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பது சுபத்தை கொடுக்கும். இதுநாள் வரை ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கி நன்மைகள் அதிகம் நடைபெறும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் பண வரவு அதிகம் கிடைக்கும். ஒன்பதாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைந்துள்ளதால் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.

திடீர் யோகம் தேடி வரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சந்தோஷம் கூடும். இந்த மாதம் சின்ன சின்ன மருத்துவ செலவுகள் வரலாம். மாத இறுதியில் செவ்வாய் உங்கள் ராசிக்குள் வருவதால் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.

சொந்த வாகனம் வாங்கலாம். புதிய வீடு வாங்க முயற்சி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆறு கிரக கூட்டணியால் சுபங்கள் அதிகரிக்கும்.

மிதுனம்

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, உங்கள் ராசிநாதன் புதன் எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு நகர்ந்து மீண்டும் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார்.

இந்த மாதத்தில் சூரியன், சந்திரன் உள்ளிட்ட ஆறு கிரகங்கள் எட்டாம் வீட்டில் உள்ளன. நீச பங்க ராஜயோகம், விபரீத ராஜயோகம் உள்ளது. உங்கள் ராசிநாதன் வக்ரமடைந்து மறைந்தாலும் லாபத்தை கொடுப்பார்.

செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். மாத பிற்பகுதியில் சூரியன், சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிற்கு இடமாற்றம் அடைகின்றன.

வேலையில் சின்னச் சின்ன பிரச்சனைகள் வரலாம் கவனமும் நிதானமும் தேவை. மாணவர்கள் படிப்பில் அக்கறையும் கவனமும் செலுத்தவும்.

சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். செலவுகள் வீண் விரையங்கள் வரலாம். சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். இந்த மாதம் நிறைய சவால்களை எதிர்கொள்வீர்கள்.

பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்க சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கவும்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிலும் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வந்து ராகு உடன் இணைகிறார்.

வேலையில் சின்னச் சின்ன மாற்றங்கள் வரலாம். திடீர் அதிர்ஷ்டங்கள் வரலாம். சகோதர சகோதரிகளிடையே உறவில் சந்தோஷம் அதிகரிக்கும்.

சனி ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் சச மகா யோகம் உண்டாகும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான மாதம். சனியின் பார்வை உங்க ராசியில் விழுகிறது.

கூடவே சந்திரன், சூரியன். புதன். சுக்கிரன், குரு ஆகிய ஆறு கிரகங்களின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

ஆறு கிரகங்களின் சேர்க்கை பார்வையால் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். மாணவர்களுக்கு இது நல்ல மாதம், குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

திருமண சுப காரிய பேச்சுவார்த்தை சந்தோஷத்தை கொடுக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வண்டி வாகனம் வாங்கலாம். இந்த மாதம் கடக ராசிக்காரர்களுக்கு ஆசைகள் நிறைவேறும், நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழப்பங்கள் ஏற்பட்டாலும் தெளிவு பிறக்கும். திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வணங்கவும் பிரதோஷ நாளில் பாலபிஷேகம் செய்யவும்.

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பலம் அதிகரிக்கும். ராசி நாதன் சூரியன் மாத முற்பகுதியில் ஆறாம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் 7ஆம் வீட்டிற்கும் மாறுகிறார்.

ஆறாம் வீட்டில் ஆறு கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. செவ்வாய் இந்த மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் வீடுகளில் சஞ்சரிப்பது சிறப்பு. செவ்வாயின் பார்வையும் சூரியனின் பார்வையும் மாத பிற்பகுதியில் உங்க ராசியின் மீது விழுகிறது.

பெற்றோர்கள் உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். சுக்கிரன் மாத பிற்பகுதியில் கும்ப ராசியில் இருந்து சிம்ம ராசியின் மீது விழுவதால் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வங்கி கடன் கிடைக்கும்.

திருமணம், சுப காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இது சரியான மாதமில்லை பிள்ளைகளுக்கு வரன் பார்ப்பதை தள்ளி போடவும்.

வீடு கட்டியிருப்பவர்கள் மாத பிற்பகுதியில் புது வீட்டிற்கு குடி போகலாம். நான்காம் வீட்டில் கேது இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வந்து நீங்கும்.

தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. ஆறாம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் கடன் பிரச்சனைகள் நீங்கும்.

புதன் வக்ரமடைந்து பின்னோக்கி வந்து சூரியன், சனி, சுக்கிரன், குரு உடன் இணைகிறார். பலம் வாய்ந்த சனியின் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றன.

சனிபகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் மன குழப்பம் நீங்கும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த விசயங்கள் கைகூடி வரும்.எட்டாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார்.

தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். எட்டுக்குடையவன் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.

வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் நிதானம் தேவை.கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமான இருக்கவும்.

செவ்வாய் 22ஆம் தேதி ஒன்பதாம் வீட்டிற்கு சென்று ராகு உடன் இணைகிறார். மாத பிற்பகுதியில் சூரியன் 6ஆம் வீட்டில் அமர்ந்து 12ஆம் வீட்டினை பார்வையிடுவதால் செலவுகள் அதிகரிக்கும். சுப செலவுகளாக மாற்றுங்கள்.

இந்த மாதம் போராட்டங்கள் நிறைந்த மாதமாக அமையும். ஐந்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தாலே மன குழப்பம் இன்றி தப்பிக்கலாம்.

பாதிப்புகள் நீங்கி பலன்கள் அதிகரிக்க யோக நரசிம்மரை விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

துலாம்

பிப்ரவரி மாதத்தில் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் 5 கிரகங்கள் இணைந்துள்ளது.

ராசிக்கு 10ஆம் வீட்டில் கிரகங்களின் பார்வை விழுகிறது. நல்ல விசயங்கள் நிறைய நடைபெறும். அர்த்தாஷ்டம சனி உங்களுக்கு நிறைய தடைகளை ஏற்படுத்துகிறது.

வக்ரமடைந்த புதன் நான்காம் வீட்டில் இணைகிறார். பிப்ரவரி 10ஆம் தேதி ஆறு கோள்கள் ஒன்றாக இணைகின்றன. து

லாம் ராசிகாரர்களுக்கு சனி சங்கடம் தருவதில்லை காரணம் சனி உங்கள் ராசியில் உச்சமடைகிறார். சனியின் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவது பலத்தை அதிகரிக்கும். செவ்வாய் பார்வை ஏழாம் வீட்டில் இருந்து உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.

மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு சந்தோஷத்தை அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் நிதானமாக உங்கள் செயலை செய்ய வேண்டும். ராகு கேதுவினால் சில தடைகள் ஏற்பட்டாலும் அதையும் மீறி கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

22ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைவது சிறப்பு. தொழில் ரீதியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்சினை, அலர்ஜி வரலாம் கவனம் தேவை.

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய மாதம். இந்த மாதம் விடா முயற்றி விஸ்வ ரூப வெற்றியை கொடுக்கும்.

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ராசியில் கேது சஞ்சரிக்கிறார்.

ஏழாம் வீட்டில் ராகு இருக்கிறார். மூன்றாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. சனி, சூரியன், புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் இணைவது பல நன்மைகளை கொடுக்கும்.

திடீர் திருப்பங்களை ஏற்படுத்தும். சனிபகவான் உங்களுக்கு ஏற்படும் சங்கடங்களை நீக்குவார். சகாயங்கள் ஏற்படும். வேலையில் இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கும்.

வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். பலவீனங்கள் நீங்கி பலம் அதிகரிக்கும். 13ஆம் தேதிக்கு மேல் சூரியன் இடப்பெயர்ச்சியாகி நான்காம் வீட்டிற்கு நகர்கிறார். பத்தாம் வீட்டில் சூரியன் பார்வை விழுகிறது.

சுக்கிரனும் இடப்பெயர்ச்சியாகி கும்பம் ராசிக்கு நகர்கிறார். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். இந்த கால கட்டத்தில் மனதில் இருந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். ஏழாம் வீட்டில் உள்ள ராகு உடன் செவ்வாய் இணைவது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

அரசு தொடர்பான வேலைக்கு முயற்சி செய்யலாம். கூட்டுத் தொழில் லாபத்தை கொடுக்கும்.

நிதி நெருக்கடிகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி சந்தோஷம் அதிகரிக்கும்.

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. இந்த மாதம் உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கு அதிகரிக்கும் மாதம் இரண்டாம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளன.

தன லாபம் அதிகரிக்கும். பொருளாதார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடன் பிரச்சினை நீங்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும்.

சவால்கள் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் பண பிரச்சினை நீங்கும். சுக ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சுகங்கள் அதிகரிக்கும்.

உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

ஆறாம் வீட்டில் ராகு, 12ஆம் வீட்டில் கேது கிரகங்கள் சஞ்சரித்தாலும் பிரச்சினை இல்லை. போராட்டங்கள் நீங்கும்.

வேலையில் இடமாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதம் நினைத்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

மாத பிற்பகுதியில் சூரியன் இடமாற்றம் அடைகிறார் வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.

சுக்கிரன் இடமாற்றம் அடைந்து மூன்றாம் வீட்டிற்கு நகரும் போது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

இந்த மாதம் சவால்களும் சாதனைகளும் நிறைந்த மாதமாக அமையும். கிரகங்களின் கூட்டணி பார்வைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

மகரம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்துள்ளன. பிப்ரவரி 10ஆம் தேதிக்கு மேல் ஆறு கிரகங்கள் உங்கள் ராசியில் இணைகின்றன.

சனியின் வீட்டில் கிரகங்கள் இணைந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.

முதல் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால் சில சாதகங்களும் பாதகங்களும் ஏற்படும். திருமணம் சுப காரிய முயற்சிகளை தொடங்கலாம்.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சனி வீட்டில் சூரியனும் சனியும் இணைந்திருப்பதால் அரசு வேலைக்காக இப்போது முயற்சி செய்ய வேண்டாம்.

நிறைய தடைகள் வரலாம் என்பதால் பிப்ரவரி 13 வரை காத்திருக்கவும். வங்கிக்கடன் வாங்க முயற்சி செய்யலாம்.

மாத பிற்பகுதியில் உங்கள் ராசியில் உள்ள சூரியன்,சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி கும்பம் ராசிக்கு நகர்கின்றனர்.

வீடு மாறலாம், வேலையில் திடீர் மாற்றங்கள் வரும். பண வரவு அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

கும்பம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன.

ஏழரை சனியில் விரைய சனி காலமாக உள்ளது. இது விபரீத ராஜயோக காலமாகும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

மாத முற்பகுதியில் ஆறு கிரகங்கள் கூடியுள்ளன. சுப விரைய செலவுகள் அதிகமாகும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

புதன் உங்கள் ராசியில் இருந்து வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். குருவின் பார்வையால் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

மூன்றாம் வீட்டில் உள்ள செவ்வாயின் சஞ்சாரம் தைரியம், தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் உதவி அதிகரிக்கும். ச னிபகவானின் சஞ்சாரம் செயலில் நிதானத்தை கொடுக்கும்.

சூரியன் மாத பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு வருகிறார். சுக்கிரனும் மாத இறுதியில் உங்கள் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

சுப காரியம் செய்வதில் இருந்த தடைகள் நீங்கும். புதிய வேலைக்காக முயற்சி செய்யலாம்.

அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம்.

எந்த ஒரு விசயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் தெளிவான தைரியமான முடிவுகளை எடுப்பது அவசியம்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தடைகள் நீங்கி தைரியம் அதிகரிக்கும் மாதமாக அமைந்துள்ளது.

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, பிப்ரவரி மாதத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11வது வீட்டில் கிரகங்கள் கூடியுள்ளன.

தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். உழைப்பிற்கேற்ற வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.

மனதில் இருந்த மிக முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். இந்த மாதம் லாப கரமான மாதம். பிப்ரவரி 5ஆம் தேதி புதன் வக்ரமடைந்து லாப வீட்டில் இணைகிறார். 9ஆம் தேதி சந்திரன் 5 கிரகங்களுடன் இணைகிறார்.

திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். பிள்ளைகளின் கல்வி, வேலை வாய்ப்பில் வெற்றிகரமாக முடியும். வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும்.

ராகுவின் சஞ்சாரம் சகோதர சகோதரிகள் மூலம் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் லாபம் கிடைக்கும். மாத பிற்பகுதியில் சூரியன், சுக்கிரன் 12ஆம் வீட்டில் வருவதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.

பிள்ளைகள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். இந்த மாதம் வேலையில் வெற்றி கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

அரசு துறை வேலைக்கு முயற்சி செய்யலாம். அரசியல்வாதிகளுக்கு இது லாபகரமான யோகமான மாதமாக அமைந்துள்ளது.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US