மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் ? எச்சரிக்கையாக இருங்க
மார்ச் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது ? இவற்றில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்
மார்ச் 04ஆம் தேதி இரவு 06.20 மணி முதல் மார்ச் 06ஆம் தேதி இரவு 09.38 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. பேச்சிலும் செயல்களிலும் நிதானம் அவசியம் வாகன போக்குவரத்தை தவிர்த்து விடவும்.
ரிஷபம்
மார்ச் 06ஆம் தேதி இரவு 09.38 மணி முதல் மார்ச் 09ஆம் தேதி அதிகாலை 02.38 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. வாகன போக்குவரத்தில் வேகத்தை தவிர்க்கவும்.
மிதுனம்
மார்ச் 09ஆம் தேதி அதிகாலை 02.38 மணி முதல் மார்ச் 11ஆம் தேதி அதிகாலை 09.21 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. வாகன போக்குவரத்தில் விழிப்புணர்வு அவசியம்.
கடகம்
மார்ச் 11ஆம் தேதி அதிகாலை 09.21 மணி முதல் மார்ச் 13 ஆம் தேதி மாலை 05.56 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. பேச்சிலும் செயலிலும் நிதானமும் கவனமும் அவசியம்.
சிம்மம்
மார்ச் 13 ஆம் தேதி மாலை 05.56 மணி முதல் மார்ச் 16ஆம் தேதி அதிகாலை 04.43 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பேச்சில் கவனமும் நிதானமும் தேவை மவுன விரதம் இருப்பது நல்லது.
கன்னி
மார்ச் 16ஆம் தேதி அதிகாலை 04.43 மணி முதல் மார்ச் 18ஆம் தேதி மாலை 05.22 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமும் நிதானமும் தேவை. புதிய முடிவுகளை தள்ளி வைக்கவும். பெரிய அளவில் பண முதலீடுகள் செய்ய வேண்டாம்.
துலாம்
மார்ச் 18ஆம் தேதி மாலை 05.22 மணி முதல் மார்ச் 21ஆம் தேதி காலை 06.08 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.
வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம். தொழில் வியாபாரங்களில் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடவும்.
விருச்சிகம்
மார்ச் 21ஆம் தேதி காலை 06.08 மணி முதல் மார்ச் 23ஆம் தேதி மாலை 04.30 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.
பெரிய அளவில் பணம் முதலீடு செய்வதை தவிர்த்து விடவும். பேச்சிலும் செயலிலும் இரண்டு நாட்களுக்கு நிதானம் அவசியம்.
தனுசு
மார்ச் 23ஆம் தேதி மாலை 04.30 மணி முதல் மார்ச் 25ஆம் தேதி இரவு 10.48 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் அவசியம். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம்.
மகரம்
மார்ச் 25ஆம் தேதி இரவு 10.48 மணி முதல் மார்ச் 28ஆம் தேதியன்று அதிகாலை 01.20 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் செயல்களில் விழிப்புணர்வும் அவசியம். வண்டி வாகன போக்குவரத்தில் கவனமும் நிதானமும் தேவை.
கும்பம்
மார்ச் 02 மாலை 4.29 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மார்ச் 28ஆம் தேதி அதிகாலை 01.20 மணி முதல் மார்ச் 30ஆம் தேதி அதிகாலை 01.42 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. பேச்சிலும் வாகன போக்குவரத்திலும் நிதானம் தேவை.
மீனம்
மார்ச் 02ஆம் தேதி மாலை 04.29 மணி முதல் மார்ச் 04ஆம் தேதி மாலை 06.20 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பேச்சில் நிதானம் தேவை.
மார்ச் 30ஆம் தேதி அதிகாலை 01.42 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.