புலம்பெயர் பெற்றோரின் பெருமைமிகு குழந்தை நான்! ஆஸ்கர் மேடையில் ட்ரம்புக்கு எதிராக பேசிய நடிகை
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விழாவில் நடிகை ஸோய் சல்டனாவின் பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.
97வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் அவதார் புகழ் நடிகை ஸோய் சல்டனா (Zoe Saldana) "எமிலியா பெரெஸ்" படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
இது அவரது முதல் அகாடமி விருதாகும். விருதை பெற்ற பின் மேடையில் பேசிய அவர், "என் பாட்டி 1961யில் இந்த நாட்டிற்கு வந்தார். கனவுகள், கண்ணியம் மற்றும் கடின உழைப்பு கொண்ட புலம்பெயர்ந்த பெற்றோரின் பெருமைமிக்க குழந்தை நான்" என்றார்.
மேலும் பேசிய ஸோய், "அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறை ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், புலம்பெயர் மக்களை நாட்டைவிட்டு வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
பல்வேறு சமூக மக்களை கருத்தில் கொண்டு அதிகாரப்பூர்வ மொழியாக பல்வேறு மொழிகள் இருந்த நிலையில், சமீபத்தில் ஆங்கிலத்தை அமெரிக்காவின் ஒற்றை மொழியாக அறிவித்தார்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |