இது வீடு இல்லங்க.. ஆஃபிஸ் தான்.., திருநெல்வேலியில் உள்ள Zoho-வின் புதிய அலுவலகம்
திருநெல்வேலியில் கட்டப்பட்டு வரும் Zoho நிறுவனத்தின் புதிய அலுவலக புகைப்படங்கள் வியக்கும் அளவுக்கு உள்ளன.
ZOHO நிறுவனம்
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ZOHO நிறுவனம் SAAS சாம்ராஜ்ஜியமாக விளங்குகிறது.
இதனை 1996 -ம் ஆண்டு சிறிய ப்ரொடக்ட் நிறுவனமாக ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கினர். தற்போது, பெரிய வர்த்தகமாக உருவெடுத்து சாம்ராஜ்ஜியமாக நிற்கிறது.
இந்நிறுவனம் பல கோடி சிறிய வர்த்தக நிறுவனத்தின் நிர்வாக மேம்பாட்டிற்கு உதவி செய்தது. மேலும், ZOHO -வில் மலிவான சேவை இருப்பதால் பல வாடிக்கையாளர்கள் நிர்வாக பணிகளுக்காக பல மில்லியன் டொலர்களை சேமிக்கவும் உதவுகிறது.
திருநெல்வேலியில் ZOHO
மதுரைக்கு வந்த சோஹோ அலுவலகம் இளம் தலைமுறையினருக்கு பெரும் உதவியாக இருந்தது. இந்நிலையில் திருநெல்வேலியில் கட்டப்பட்டு வரும் Zoho நிறுவனத்தின் புதிய அலுவலக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அங்கு கட்டப்பட்டு வரும் அலுவலகமானது வீடா, அலுவலகமா என்றும் கேட்கும் அளவுக்கு உள்ளது. ZOHO நிறுவனம் தொடக்கத்தில் இருந்தே தனது அலுவலக வடிவமைப்பை ஒரு அடையாளமாக மாற்றி வருகிறது.
அந்தவகையில் சென்னையில் உள்ள ZOHO -வின் தலைமை அலுவலகமும் டம்ளர் போன்ற வடிவத்தில் இருக்கும். சென்னை Estancia IT Park-ல் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகமும் ஐரோப்பிய ஸ்டைலில் உள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலியில் ZOHO நிறுவனம் தனது புதிய அலுவலகத்தின் வெளிப்புறத்தை வீட்டை போன்று வடிவமைத்துள்ளது. மேலும், அலுவலகத்தின் உட்புறத்தில் மரவேலைப்பாடுகள் கொண்டு பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |