தமிழ்நாட்டில் பரவும் போதை பொருள்.., அண்ணாமலையின் வீடியோவை பகிர்ந்த ZOHO ஸ்ரீதர் வேம்பு
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களுக்கு போதை பொருள் பரவி விட்டது என்று ZOHO நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு புகார் ஒன்றை வைத்துள்ளார்.
திமுக முன்னாள் உறுப்பினர்
இந்திய தலைநகரான டெல்லியில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் சிக்கியுள்ளார். இவர், முன்னாள் திமுக நிர்வாகி ஆவார். மேலும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும், திமுகவின் முன்னாள் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார்.
இந்த விவகாரம் உருவெடுத்த நிலையில் திமுகவில் இருந்து ஜாபர் சாதிக்கை நீக்கினர். தற்போது, இவர் தலைமறைவாகி உள்ளார். இவரை போதை பொருள் வழக்கில் தேடி வருகின்றனர்.
இந்த கும்பல் செயல்பட்டு வந்த டெல்லி குடோனில் இருந்து 50 கிலோ போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அண்ணாமலையின் பதிவு
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, போதை பொருளை தீர்க்க திமுக அரசு தவறிவிட்டது என்றும், கட்சியின் உறுப்பினர் சர்வேதேச போதை பொருள் கடத்தல் கும்பலில் உள்ளார் என்றும் திமுகவை குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பரவ முக்கிய காரணமாக திமுக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
ZOHO ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu)
இந்நிலையில் போதை பொருள் குறித்து பேசிய அண்ணாமலையின் வீடியோவை பகிர்ந்த ZOHO ஸ்ரீதர் வேம்பு, "தமிழ்நாட்டில் நான் வசிக்கும் இடம் போன்ற தொலைதூர கிராமங்களுக்கு போதைப்பொருள் வந்துள்ளது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
I can confirm that narcotic drugs have arrived in remote villages like where I live in Tamil Nadu. We are struggling to keep our school kids off drugs.
— Sridhar Vembu (@svembu) February 29, 2024
What Annamalai-ji has discussed here goes well beyond politics. We have to deal with this issue resolutely.
Singapore and… https://t.co/dsFj0pL5D9
எங்கள் பள்ளிக் குழந்தைகளை போதையில் இருந்து காப்பாற்ற போராடி வருகிறோம். அண்ணாமலை பேசியது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்தப் பிரச்சினையை நாம் உறுதியாகக் கையாள வேண்டும்.
சிங்கப்பூரும் மலேசியாவும் மிகவும் வலுவான போதைப்பொருள் எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்டுள்ளன, அவற்றை நாம் பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |