தீபிந்தர் கோயலுக்கு புதிய சிக்கல்... Zomato மீது வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய ஊழியர்
தீபிந்தர் கோயலின் ஜொமாட்டோ நிறுவனம் ஊழியர்களை நெறிமுறையற்ற பணிநீக்கத்தில் ஈடுபடுவதாக ஊழியர் ஒருவர் சமூக ஊடக பதிவில் குற்றம் சாட்டியதை அடுத்து, அந்த நிறுவனம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நெறிமுறையற்ற நடத்தை
இந்த ஆண்டு பிப்ரவரியில் ஜொமேட்டோவில் சேர்ந்ததாகக் கூறப்படும் ஷஷாங்க் சுக்லா என்பவர், சமூக ஊடகத்தில் குற்றச்சாட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்.
நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எதிராக Zomato தொடர்ந்து நெறிமுறையற்ற நடத்தையில் ஈடுபட்டு வருவதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக இந்தப் பதிவு என குறிப்பிட்டுள்ள ஷஷாங்க் சுக்லா,
நான் இந்த நிறுவனத்தின் ஒரு அங்கம், ஊழியர்களின் ஒப்புதல் கூட இல்லாமல் ஊழியர்களை நெறிமுறையற்ற முறையில் நீக்குவது இங்கு நடக்கிறது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
கருத்தில் கொள்ளாமல்
மேலும், Zomato நிறுவனம் ஊழியர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் பணிநீக்கம் செய்வதாக சுக்லா குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் உங்களை பணிநீக்கம் செய்வார்கள்,
ஆனால் அவர்களின் நெறிமுறையற்ற நடத்தை தொடர்பாக உயர் நிர்வாகத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, சமூக ஊடகத் தளங்களில் அவற்றைப் பகிரங்கப்படுத்துவதற்கு முன்பு மின்னஞ்சல் மூலம் தனது கவலைகளை எழுப்பியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |