பெயர் மற்றும் சின்னத்தை மாற்றிய Zomato.., புது பெயர் என்ன தெரியுமா?
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் நிறுவனங்களாக சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் உள்ளன.
சொமடோ (zomato) நிறுவனம் தனது பெயரை சொமடோ லிட் என்பதில் இருந்து எடெர்னல் லிட் (Eternal) என மாற்றுவதாக அறிவித்துள்ளது.
இந்த பெயர் மாற்றத்திற்கு சொமடோ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
நிறுவனத்தின் வாரியம் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், இப்போது முறையாக பெயரை மாற்றுவதற்கு பங்குதாரர்களின் ஒப்புதல் தேவைப்படும்.
எனவே இது குறித்து, சொமடோ நிறுவனத்தின் சி.இ.ஓ. தீபிந்தர் கோயல், நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தீபிந்தர் கோயல் கூறியிருப்பதாவது, "பெயர் மாற்றத்தை நிர்வாகக் குழு இன்று அங்கீகரித்துள்ளது. எனவே எங்கள் பங்குதாரர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பெயர் மாற்றம் அங்கீகரிக்கப்பட்டதும், நிறுவனத்தின் இணையதளம் சொமடோ.காம் (zomato.com) என்பதில் இருந்து எடெர்நல்.காம் (eternal.com) என மாறும். அதேபோல், பங்கு குறியீட்டிலும் சொமடோ என்பது எடெர்நல் என மாறும்.
எடெர்நல் கீழ், சொமடோ (Zomato), பிலிங்கிட் (Blinkit), டிஸ்ட்ரிக்ட் (District) மற்றும் ஹைபர்பூர் (Hyperpure) ஆகியவை அடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நிறுவனத்தின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும், செயலி பெயரில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |