பிரித்தானியாவில் ஜாம்பி கத்திகளுக்கு தடை... மகனை இழந்த இந்திய வம்சாவளித்தாயின் கோரிக்கை ஏற்கப்பட்டது
பிரித்தானியாவில் ஜாம்பி கத்திகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. அத்துடன், அத்தகைய கத்திகளை பறிமுதல் செய்வதுடன், அழிக்கவும் பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
தவறுதலாக கொல்லப்பட்ட சிறுவன்
கடந்த ஆண்டு, ஜூன் மாதம், 29ஆம் திகதி, ரோனன் கந்தா (Ronan Kanda, 16) என்ற பதின்ம வயது சிறுவன் இங்கிலாந்திலுள்ள Lanesfield என்ற இடத்தில் வைத்து வாளால் குத்தப்பட்டான்.
தகவலறிந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினரால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டான்.
பிரதமர் ரிஷியை சந்திக்க விரும்பும் தாய்
இந்நிலையில், தான் பிரதமர் ரிஷியை சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்ர் ரோனனின் தாயாகிய பூஜா. இதுபோன்ற பயங்கர கத்திகள், வாள்கள் மக்களை கொலை செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றின் விற்பனை ஏன் தடை செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார் பூஜா.
இப்படிப்பட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருப்போர் மற்றும் விற்பனை செய்வோரால் மற்ற குடும்பங்களுக்கும் இழப்பு ஏற்படாதவகையில் அவற்றை தடை செய்ய பிரதமரை தான் கோர விரும்புவதாக தெரிவித்திருந்தார் அவர்.
பிரதமர் முடிவு
இந்நிலையில், இந்த பட்டாக்கத்திகள் போன்ற பயங்கரக் கத்திகளுக்கு தடை விதிக்க இருப்பதாக பிரதமர் ரிஷி அறிவித்துள்ளார். ஆக, ரோனனின் தாயான பூஜா போன்றவர்களின் கோரிக்கை நிறைவேற உள்ளது.
வீட்டு உபயோகங்களுக்கோ, வேலை செய்வதற்கோ உதவாத இந்த வகை கத்திகள், ஜாம்பி சினிமாக்களில் காட்டப்படுவதால் அவை ஜாம்பி கத்திகள் என அழைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |