ஒரே இன்னிங்சில் தங்கள் முதல் சதத்தை பதிவு செய்த இருவர்
வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவின் ஸோர்ஸி மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் தங்கள் முதல் சதத்தை பதிவு செய்தனர்.
டோனி டி ஸோர்ஸி
Chattogramயில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணி தங்கள் முதல் இன்னிங்சை நேற்று தொடங்கியது. மார்க்ரம் (33) ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து டோனி டி ஸோர்ஸி (Tony de Zorzi) முதல் டெஸ்ட் சதம் விளாசினார்.
Tony De Zorzi stood on business with an unbeaten 141* today ??
— Proteas Men (@ProteasMenCSA) October 29, 2024
An absolute anchor for the team at the crease. Showing grit, patience, and Protea pride ????#WozaNawe #BePartOfIt #BANvSA pic.twitter.com/f26GBTeAHP
அவரைத் தொடர்ந்து இளம் வீரரான ட்ரிஸ்டன் ஸ்டப்ஸும் (Tristan Stubbs) தனது முதல் சதத்தினை அடித்தார். இந்த கூட்டணி 201 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
ஸ்டப்ஸ் சதம்
ஸ்டப்ஸ் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் பெட்டிங்கம் (David Bedingham) அதிரடியாக 78 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
Century for Tristan Stubbs ??
— Proteas Men (@ProteasMenCSA) October 29, 2024
What a knock from the young gun ?.
Bringing power, passion, and pure Protea pride to the crease ????#WozaNawe #BePartOfIt #BANvSA pic.twitter.com/l5G0oOk2WH
மறுமுனையில் 150 ஓட்டங்களை கடந்த ஸோர்ஸி 177 ஓட்டங்கள் எடுத்த நிலையில் lbw முறையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடங்கும்.
தற்போது வரை தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 405 ஓட்டங்கள் குவித்துள்ளது. டைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |