முதல் சர்வதேச டெஸ்ட் அரைசதம் அடித்த டோனி! மீண்டெழுந்த தென் ஆப்பிரிக்க அணி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி 145 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
தென் ஆப்பிரிக்கா 357
டிரினிடாட்டின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன் படி முதல் இன்னிங்சில் களமிறங்கி 357 ஓட்டங்கள் குவித்தது.
அணியின் தொடக்க வீரர் மார்க்ரம் 9 ஓட்டங்களிலும், ஸ்டப்ஸ் 20 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் டோனி டி ஸோர்ஸி (Tony de Zorzi) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் டெஸ்ட் அரைசதம்
அவருடன் கைகோர்த்த அணித்தலைவர் பவுமாவும் நிதானமாக ஆடினார். ஸோர்ஸி தனது முதல் டெஸ்ட் அரைசதத்தினை பதிவு செய்தார்.
அணியின் ஸ்கோர் 137 ஆக உயர்ந்தபோது, ஸோர்ஸி 78 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
அதன் பின்னர் பவுமா 86 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் ஓரளவு ஓட்டங்கள் எடுத்தனர்.
வாரிகன் 4 விக்கெட்
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஜோமேல் வாரிகன் (Jomel Warrican) 4 விக்கெட்டுகளும், சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், ரோச் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள், 3வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கிரேக் பிராத்வெயிட், மிஃய்லே லூயிஸ் இருவரும் தலா 35 ஓட்டங்கள் எடுத்தனர்.
கேசி கார்ட்டி 42 ஓட்டங்கள் எடுத்தனர். கவேம் ஹாட்ஜ் (11), ஜேசன் ஹோல்டர் (13) இருவரும் களத்தில் உள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் 212 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
A special effort in the first innings with the ball.?#WIvSA #MenInMaroon pic.twitter.com/A4bAu85TlU
— Windies Cricket (@windiescricket) August 9, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |