சொத்து மதிப்பில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட மார்க் ஜுக்கர்பெர்க்: கூறப்படும் காரணம்
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பில் பெருமளவு சரிவு காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்தாம் இடத்திற்கு
இதன் காரணமாக அவர் தற்போது உலக பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால், ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில்,

இந்த வீழ்ச்சியானது மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (AI) மீதான வரம்பற்ற செலவுத் திட்டங்கள் காரணமாக ஏற்பட்டுள்ளது என்றே தெரிவித்துள்ளது.
மேலும், ஜுக்கர்பெர்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது 235 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, 29.2 பில்லியன் டொலர் இழப்பை அவர் சந்தித்துள்ளதால், பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மட்டுமின்றி, அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் லாரி பேஜ் ஆகிய இருவரும் பட்டியலில் ஜுக்கர்பெர்க்கை முந்தியுள்ளனர்.
11 சதவீதம் சரிந்தது
மெட்டாவின் AI மீதான வரம்பற்ற செலவினத் திட்டங்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளில் பெரும் சரிவைத் தூண்டியுள்ளதாகவே கூறுகின்றனர்.
மேலும், AI ஆராய்ச்சிக்கான செலவினங்களை அதிகரிக்க, இந்த ஆண்டின் மிகப்பெரிய முதலீட்டு தர பத்திர சலுகையை வெளியிடப் போவதாக மெட்டா நிறுவனம் கூறியதை அடுத்து, அதன் பங்கு 11 சதவீதம் சரிந்தது.

நவம்பர் 1 ம் திகதி நிலவரப்படி மெட்டா பங்கு தற்போது 648.35 அமெரிக்க டொலர்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. வியாழக்கிழமை தொடங்கிய சரிவுக்கு முன்பு மெட்டாவின் பங்கு இந்த ஆண்டு 28 சதவீதம் உயர்ந்து, ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பில் 57 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |