நான் மனைவி சொல் கேட்பவன்: மெட்டா நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்கிற்கு குவியும் பாராட்டுக்கள்
மெட்டா நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் தன்னை மனைவியின் சொல்படி நடப்பவர் என்று கூறியதன் மூலம் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
மார்க் ஸூக்கர்பெர்க்
மெட்டா (பேஸ்புக்) நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் 2012ஆம் ஆண்டில் Braintreeயைச் சேர்ந்த Pediatrician ஆன பிரிசில்லா சானை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில், மார்க் நடத்தும் நிறுவனங்களின் இணை நிறுவனர் மற்றும் CEO ஆக பிரிசில்லா சான் உள்ளார்.
இந்த நிலையில் தம்பதியர் நல நிபுணர் இஸபெல் மோர்லே, தங்களை 'Wife Guy' ஆக காட்டிக்கொள்ளும் ஆண்கள் ஒரு பெரிய விடயமாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
அதாவது, மார்க் ஸூக்கர்பெர்க் தன்னை மனைவியின் சொல் கேட்டு நடப்பவர் என்று கூறிக்கொள்வதாக இஸபெல் கூறுகிறார்.
ஒரு சமமான பங்குதாரர்
மேலும் அவர் கூறுகையில், "ஆண்கள் நேர்மறையான உறவைக் கொண்டிருப்பதை ஒரு சாதனையாகப் பார்ப்பது சரி என்பதை இது காட்டுகிறது - இது வெறும் தொழில் வெற்றி மட்டுமல்ல. மனைவி என்பவர் வெறும் ஆதரவு நபர் அல்லது சிறந்த நண்பர் பாத்திரம் அல்ல. அவர்கள் ஒரு சமமான பங்குதாரர் என்பது மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு நல்ல செய்தி" என்று தெரிவிக்கிறார்.
ஆனாலும், இது கணக்கிடப்பட்ட PR நடவடிக்கையா அல்லது அவரது மனைவி மீதான அவரது அபிமானத்தை இயல்பான வெளிப்பாடா என்பது தெளிவாக இல்லை என்றும் இஸபெல் குறிப்பிடுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் மார்க் தனது மனைவியுடனான வாழ்க்கையை பெருமையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, ஆகத்து மாதம் மனைவி பிரிஸில்லாவின் சிலையை மார்க் திறந்து வைத்தார். அப்போதே பாராட்டுக்களை பெற்ற மார்க் தற்போது வெளியாகியுள்ள இஸபெல்லின் வார்த்தைகள் மூலம் மேலும் ஆதரவினை பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |