எலான் மஸ்க் உடன் சண்டையிட தயாரான ஜுக்கர்பெர்க்! என்ன நடக்கிறது?
எலான் மஸ்க்- மார்க் ஜுக்கர்பெர்க் இடையிலான கருத்து மோதல் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இடையே அவ்வப்போது கருத்து மோதல் ஏற்படுவது உண்டு. இது பேசு பொருளாக மாறும். அந்த வகையில் தற்போது ட்விட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க்- பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் இடையிலான கருத்து மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Better be careful @elonmusk I heard he does the ju jitsu now ? ? ? ? ? ? ? ? ?
— Kwmarkoff@aol.com (@kwmarkoff26656) June 21, 2023
மெட்டா நிறுவனம் ட்விட்டர் தளத்திற்கு போட்டியாக ஒரு புதிய தளத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு 'ப்ராஜெக்ட் 92' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் இங்குதான் இருவருக்கும் கருத்து மோதல் தொடங்கியது. மெட்டா நிறுவனத்தின் முயற்சியை மஸ்க் மறைமுகமாக விமர்சனம் செய்து ட்விட் பதிவிட்டார்.
இதைத் தொடர்ந்து ட்விட்டர் பயனர் ஒருவர் மஸ்க்கை டேக் செய்து, "பேஸ்புக் நிறுவனர் ஜியு-ஜிட்சு பயிற்சி செய்து வருவதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஜியு-ஜிட்சு என்பது தற்காப்பு கலைகளில் ஒன்றாகும். 39 வயதான ஜுக்கர்பெர்க் அண்மையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.
பயனரின் ட்விட்டிற்கு பதிலளித்த மஸ்க், "நேருக்கு நேர் ஒரு கூண்டு மல்யுத்த போட்டிக்கு தயார்" என்று சவால் விடுத்தார்.
இதை எல்லாம் கவனித்த ஜுக்கர்பெர்க் தங்கள் நிறுவனத்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இடத்தை தெரிவிக்கவும்" என்று பதிவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜுக்கர்பெர்க்கின் பதிவு குறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்கா சாரிக்கும் உறுதிப்படுத்தினார். இந்த பதிவு கருத்து "உண்மையாக இருந்தால், நான் அதற்கு தயார்" என்று மஸ்க் கூறினார்.
எலான் மஸ்க்- மார்க் ஜுக்கர்பெர்க் இடையிலான இந்த மோதல் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. மஸ்க்-ஜுக்கர்பெர்க் இருவரும் கூண்டுக்குள் பாக்சிங் போட்டிக்கு தயாராக இருப்பது போன்ற புகைப்படங்களை இணையவாசிகள் பதிவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |