ஆண்டு சம்பளம் வெறும் 1 டொலர்... இதர ஊதியமாக ரூ 199 கோடி பெற்றுக்கொண்ட Meta CEO
Meta நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் 2023ல் ஒரே ஒரு டொலர் சம்பளமாக பெற்றுள்ள நிலையில், அவருக்கான இதர ஊதியமாக சுமார் 199 கோடி பெற்றுக்கொண்டுள்ளார்.
பாதுகாப்பு செலவுகள் 40 சதவிகிதம்
குறித்த தொகையானது அவரது பாதுகாப்புக்கான செலவுகள் என்றே Meta நிறுவனம் அனுமதித்துள்ளது. ஆனால் அவரது பாதுகாப்புக்கு என எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்பது தொடர்பான தரவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
2023ல் அவரது பாதுகாப்புக்கு என ஒதுக்கப்படும் தொகையை Meta நிறுவனம் 14 மில்லியன் டொலர் என அதிகரித்திருந்தது. 2022ல் 10 மில்லியன் டொலர் என இருந்துள்ளது.
2018ல் இருந்து ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பு செலவுகள் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் செலவுகளை குறைக்கும் வகையில் Meta நிறுவனம் 11,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய நிலையிலேயே, ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்கு என ஒதுக்கப்படும் தொகையை அதிகரித்துள்ளனர்.
இந்தியாவின் மூன்றாவது பெரும் கோடீஸ்வர பெண்மணி... ரூ 98,327 கோடி நிறுவனத்திற்கு உரிமையாளர் இவரது மகன்
மட்டுமின்றி, பாதுகாப்புக்கு என ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, அவர் அந்த தொகையை கூடுதல் பாதுகாப்பு சேவையை பயன்படுத்தவும், புதிய கண்காணிப்பு கருவிகள் உள்ளிட்ட வசதிகளை அதிகரித்துக்கொள்ள பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டனர்.
சொத்து மதிப்பு 155 பில்லியன்
ஆனால் 2023ல் அளிக்கப்பட்ட 24.4 மில்லியன் டொலர் தொகையில் அவரது தனிப்பட்ட விமானத்திற்கான செலவுகளும் மூனெடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
39 வயதான மார்க் ஜுக்கர்பெர்க் தற்போதும் ஆண்டுக்கு 1 டொலர் சம்பளம் வாங்கி வருகிறார். இதில் ஏனைய ஊழியர்கள் போன்று Meta நிறுவனத்தின் ஊக்கத்தொகை அல்லது வருடாந்தர பங்குகளும் அன்பளிப்பாக பெறுவதில்லை என்ற முடிவுடன் ஜுக்கர்பெர்க் உள்ளார்.
ஆண்டு பிறந்து 4 மாதங்களில் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 47 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது. உலகின் நான்காவது பெரும் கோடீஸ்வரராக உள்ள மார்க் ஜுக்கர்பெர்க்கின் மொத்த சொத்து மதிப்பு என்பது 155 பில்லியன் டொலர்.
இந்த 4 மாத காலகட்டத்தில் Meta நிறுவனத்தின் நிகர லாபம் மொத்த வருவாயுடன் 12.4 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |