புதிய உடைகளை அதிகம் வாங்கவேண்டாம்: மக்களுக்கு சுவிஸ் மாகாணமொன்றின் வித்தியாசமான கோரிக்கை
சுவிஸ் மாகாணமொன்றின் அதிகாரிகள், மக்கள் புதிய உடைகளை குறைவான அளவிலேயே வாங்க அறிவுறுத்த ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
வீணாகும் உடைகள்
சுவிஸ் மாகாணமாகிய சூரிச்சில் ஆண்டொன்றிற்கு 2,000 டன் எடையுள்ள உடைகள் தேவையற்றவை என மக்களால் ஒதுக்கப்படுகின்றனவாம்.
அவற்றில் பெரும்பாலான உடைகள் அணியத்தக்க நிலையில் இருந்தாலும், அவை வீணென ஒதுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றனவாம்.
இப்படி வீணென தூக்கியெறியப்படும் உடைகள் மற்றும் காலணிகள், வெளியேற்றப்படும் பசுமைவாயுவில் சுமார் 8 சதவிகிதத்துக்கு காரணமாக அமைகின்றன.
அதிகாரிகள் எடுத்துள்ள முடிவு
ஆகவே, சூரிச் அதிகாரிகள், புதிய உடைகள் வாங்குவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
உடைகளை புதிது புதிதாக வாங்கிக்கொண்டே இருப்பதற்கு பதிலாக, அவைகளை மறுசுழற்சி செய்து அணிவதால், வீணாக எறியப்படும் உடைகளால் உருவாகும் பசுமைவாயுவின் அளவைக் குறைக்கலாம் என அவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்ல இருக்கிறார்கள்.