1,300 ஹெக்டேர் வனப்பரப்பை கபளீகரம் செய்த காட்டுத்தீ: இம்முறை வீடுகளும் தப்பவில்லை...
பிரான்சில் சில பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவிவருகிறது.
காட்டுத்தீயில் நான்கு வீடுகளும் எரிந்து நாசமானதால், அப்பகுதியில் வாழும் 540 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
தென்மேற்கு பிரான்சில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீ 1,300 ஹெக்டேர் வனப்பரப்பை கபளீகரம் செய்துவிட்டது.
அத்துடன், நான்கு வீடுகளும் எரிந்து நாசமானதால், அப்பகுதியில் வாழும் 540 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
திங்கட்கிழமை பற்றிய தீயை அணைக்க, சுமார் 350 தீயணைப்புத்துறையினர் ஆறு விமானங்கள் உதவியுடன் போராடி வருகிறார்கள்.
இது குறித்து தெரிவித்த Gironde பகுதி அதிகாரி ஒருவர், நான்கு வீடுகள் உட்பட பல கட்டிடங்கள் எரிந்து நாசமாகிவிட்டன என்றார்.
இந்த ஆண்டு, பிரான்சில் 60,000 ஹெக்டேர்களுக்கு அதிகமான வனப்பகுதி காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Photo: AFP