ஏதென்ஸின் எதிர்பாராத வெடிப்பு விபத்து: பிரித்தானியர் உட்பட 6 பேர் உயிரிழப்பு
1 Brit man including 6 dead in Athens Blast: ஏதென்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெடிப்பு சம்பவத்தில் ஒரு பிரித்தானிய குடிமகன் மற்றும் 4 அமெரிக்க சுற்றுலா பயணிகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவமானது வெள்ளிக்கிழமை ஏதென்ஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிளாகா பகுதியில் அரங்கேறியுள்ளது.
விடுமுறை கால வாடகை வீடுகள் அமைந்திருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் எரிவாயு கசிவே இந்த வெடிப்பு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று மீட்புப் படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் உள்ளூர் கிரேக்க குடிமகன் ஒருவரும் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது அருகிலிருந்த கட்டிடங்கள் சேதமடைந்த காரணத்தினால் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வெடிப்பின் போது தெருவில் சிதறிய வெடிப்புகள் காரணமாக சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.