ஒரு லீட்டர் கழுதை பால் ரூ.5000; பால்காரர் கோடீஸ்வரரானது எப்படி?
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள பதான் மாவட்டத்தில் வசிக்கும் திரன் சோலங்கி என்பவர் கழுதை பால் விற்று கோடீஸ்வரராகியுள்ளார்.
பால்காரர் கோடீஸ்வரரானது எப்படி?
ரூ.22 லட்சத்தை முதலீடு செய்து 20 கழுதைகளை வாங்கி அதன் பால்களை விற்கு ஒருவர் பணக்காரர் ஆகியுள்ளார்.
ஆரம்பத்தில் இவருடைய கழுதை பாலின் விலையானது சற்று குறைவாகவே இருந்துள்ளது. அதாவது தொழில் ஆரம்பிக்கப்பட்டு 5 மாதங்களுக்கு நஷ்டம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னரே கழுதை பாலின் முக்கியத்துவத்தை அறிந்துக்கொண்டு, தென் இந்தியாவிற்கு தனது பாலை விற்க ஆரம்பித்தார்.
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு கழுதை பாலை விநியோகித்து வருவதோடு அழகு பொருட்கள் தயாரித்து வரும் நிறுவனங்களுக்கும் விநியோகித்து வந்துள்ளார்.
இவர் தயாரிக்கும் ஒரு கிலோ பால் பொடியை ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.
இவர் தனது முன்னேற்றத்திற்கு ஆன்லைன் தளத்தை உபயோகித்துள்ளார். இதன் மூலம் வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகரித்து சென்றது.
இவருடைய நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.0.5 கோடி முதல் ரூ.2.5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
முகத்தில் உள்ள தோல் சுருக்கங்களை போக்கவும் சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற்ற கழுதை பால் உதவுவதாக நம்பப்படுகிறது.
எனவே கழுதை பாலை பெண்களுக்கும் விற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |