ஆனந்த் அம்பானியின் உடல் எடையை குறைக்க உதவிய அந்த நபர்; அவருடைய நாள் சம்பளம்?
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் உடல் எடையை குறைக்க உதவிய உடற்பயிற்சியாளரின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
அந்த நபர் யார்?
அனந்த் அம்பானிக்கு 18 மாதங்களில் 108 கிலோ எடையைக் குறைப்பதில் உதவியதன் மூலமாகவே இவர் பிரபலமானார்.
வினோத் சன்னா இந்தியாவின் சிறந்த பிரபல உடற்தகுதி பயிற்சியாளர்களில் ஒருவராகவும் தற்போது கருதப்படுகிறார்.
இவர் முதலில் மிகவும் மெல்லிய உடல் தோற்றத்துடன் இருந்துள்ளார். இதன் காரணமாக சுற்றியுள்ளவர்களினால் பல சூழ்நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஓர் நேர்காணலின் போது, வளர்ந்த காலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவித்ததாகவும், உணவைத் தவிர்த்துக்கொண்டு வளர்ந்து வந்ததாகவும் கூறினார்.
உடற்தகுதி பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு, அவர் வீட்டு பராமரிப்பு மற்றும் காவலாளி போன்ற வேலையை தான் செய்து வந்துள்ளார்.
சம்பளம்
12 பயிற்சி அமர்வுகளுக்கு வினோத் சன்னா 1.5 லட்சம் ரூபாய் வசூலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனந்த் அம்பானியைத் தவிர, நீதா அம்பானி, குமார் மங்கலம் பிர்லா, அனன்யா பிர்லா மற்றும் ஜான் ஆபிரகாம், ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ஹர்ஷ்வர்தன் ரானே, விவேக் ஓபராய் மற்றும் அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களுக்கும் வினோத் சன்னா தனிப்பட்ட பயிற்சியாளராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |