ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கும் முருங்கைக்காய்; எப்படி தெரியுமா?
Weight Loss
Healthy Food Recipes
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
எவ்வளவு தான் நீங்கள் முயற்சி செய்து பார்த்தாலும் உங்களால் உடலை சீராக வைத்துக்கொள்ள முடியவில்லையா?
அதற்கு எல்லாம் தீர்வு தரும் வகையில் இருப்பது தான் முருங்கைக் காய். முருங்கை இலைகள், விதைகள், பூக்கள், பட்டை, வேர்கள் என அனைத்தும் மனிதனின் உடலுக்கு நன்மையை வழங்குகிறது.
அந்தவகையில் நீங்கள் உடல் எடையை உடனே குறைக்க விரும்பினால் உடனே இந்த முருங்கைக்காய் சூப் செய்து குடித்து பாருங்க.
தேவையான பொருள்
- முருங்கைக்காய் - 100 கிராம்
- தக்காளி - 50 கிராம்
- பருப்பு - 30 கிராம்
- நெய் - 1 டீஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- கிராம்பு - 1
- பிரிஞ்சி இலை - 1
- இஞ்சி - அரை அங்குலம்
- மஞ்சள் - அரை அங்குலம்
- கல் உப்பு - 1 சிட்டிகை
- கருப்பு மிளகு - 1 சிட்டிகை
- கொத்தமல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
-
துவரம்பருப்பு, தோல் நீக்கிய முருங்கைக்காய் மற்றும் தக்காளியை குக்கரில் சேர்த்து அதனுள் தண்ணீரும் ஊற்றி 4 விசில் வரை வேக வைக்கவும்.
- வேக வைத்து எடுத்தவுடன் அதை மசித்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி மஞ்சள், இஞ்சி, பிரிஞ்சி இலை, கிராம்பு, பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து கிளறி வதக்கவும்.
- பிறகு மசித்து வைத்துள்ளதை தாளித்த பொருட்களுடன் கலந்து, அதில் கொத்தமல்லி, உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கிளறவும்.
- இவ்வாறு செய்து எடுத்தால் சுவையான உடல் எடையை குறைக்கும் முருங்கைக்காய் சூப் தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US