உக்ரைனில் வெடிக்கும் வன்முறை: ராணுவ அதிகாரி ஒருவர் பலி, ஆறு பேர் படுகாயம்
உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளில் உள்ள ரஷ்ய கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் இறந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்து இருப்பதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைன் கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகியவற்றை சுதந்திர பகுதிகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கடந்த 24 நேரத்தில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில், உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 6 அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் ராணுவம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கிட்டத்தட்ட 96 ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும், இந்த தாக்குதல் சம்பவம் முந்திய 84 நாட்களை ஒப்பிடும் போது மேலும் அதிகரித்து இருப்பதாகவும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வன்முறை சம்பவத்திற்கு பின்புலமாக ரஷ்யா செயல்படுவதாகவும், கிளர்ச்சியாளர்கள் படை கனரக பீரங்கி மற்றும் கிராட் ராக்கெட் போன்றவற்றை பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.