அமெரிக்க விசா இருந்தால் போதும் - இந்த 10 நாடுகளுக்கும் இந்தியர்கள் பயணிக்கலாம்
வெளிநாடு பயணம் செல்லும் போது, பாஸ்போர்ட் உடன் அந்த நாட்டிற்கான விசா வைத்திருப்பதும் அவசியம்.
ஒரு சில நாடுகள், குறிப்பிட்ட நாட்டு பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன.
அதே போல், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், அமெரிக்கா விசா வைத்திருந்தால் கூடுதலாக விசா பெறாமல், 10 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
மெக்சிகோ
அமெரிக்க விசா வைத்திருக்கும், இந்திய குடியுரிமை பெற்றவர்கள் வேறு எந்த கூடுதல் விசாவும் இல்லாமல் 180 நாட்கள் மெக்சிகோவில் தங்கி இருக்க முடியும்.
பிலிப்பைன்ஸ்
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்கள், வேறு எந்த கூடுதல் விசாவில் இல்லாமல், 14 நாட்கள் பிலிப்பைன்ஸில் இருக்க முடியும்.
கோஸ்டா ரிகா
அமெரிக்காவின் B1/B2 விசா வைத்திருக்கும் இந்தியர்கள், வேறு எந்த விசாவும் இல்லாமல், 30 நாட்கள் வரை கோஸ்டா ரிகாவில் தங்கி இருக்க முடியும்.
கொலம்பியா
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்கள், கூடுதல் விசா எதுவும் இல்லாமல், 90 நாட்கள் வரை கொலம்பியாவில் இருக்க முடியும்.
பெரு
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்கள், கூடுதல் விசா எதுவும் இல்லாமல், 180 நாட்கள் வரை பெருவில் தங்க முடியும்.
ஜார்ஜியா
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்கள், கூடுதல் விசா எதுவும் இல்லாமல், 90 நாட்கள் வரை ஜார்ஜியாவில் தங்க முடியும்.
செர்பியா
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்கள், கூடுதல் விசா எதுவும் இல்லாமல், 90 நாட்கள் வரை செர்பியாவில் தங்க முடியும்.
துருக்கி
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்கள், மின்னணு துருக்கி விசா பெற்று, 30 நாட்கள் வரை துருக்கியில் தங்க முடியும்.
ஐக்கிய அரபு அமீரகம்
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்கள், கூடுதல் விசா எதுவும் இல்லாமல், 14 நாட்கள் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க முடியும்.
சிங்கப்பூர்
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்கள், கூடுதல் விசா எதுவும் இல்லாமல், 4 நாட்கள் வரை சிங்கப்பூரில் தங்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |