பிரித்தானிய விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கான சிறப்பு வாய்ப்பு: இந்த 10 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்
இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பிரித்தானிய விசா பெறுவது சிரமமானதுதான். ஆவணங்கள், நேர்காணல், நிறைய காத்திருப்பு என கடினமாக இருக்கலாம்.
ஆனால் அதுவே ஒரு 'விசா ஜாக்பாட்' போல பல நாடுகளுக்குச் செல்ல அனுமதி அளிக்கிறது.
கீழ்க்காணும் 10 நாடுகள், பிரித்தானிய விசா வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் விசா எதுவும் வேண்டாம் என அனுமதிக்கின்றன.
இந்த தகவல்கள் Atlys என்ற டிஜிட்டல் விசா பிளாட்பாரத்தில் வெளியிடப்பட்டவை.
1. அல்பேனியா (Albania)
90 நாட்கள் வரை தங்கலாம். Multiple-entry பிரித்தானிய விசாவாக இருக்கவேண்டும் மற்றும் குறைந்தது ஒருமுறை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கடற்கரைகளை ரசிப்பவர்களுக்கு ஏற்ற இடம்.
2. பஹாமாஸ் (Bahamas)
90 நாட்கள் வரை தங்கலாம். Multiple-entry பிரித்தானிய விசாவாக இருக்கவேண்டும் மற்றும் குறைந்தது ஒருமுறை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 700-க்கும் அதிகமான தீவுகள், கண்ணாடி போன்ற தெளிவான நீர் மற்றும் கடற்கரைகள் உங்கள் பயணத்தை மெருகூட்டும்.
3. ஐர்லாந்து (Ireland)
நீங்கள் பிரித்தானியாவில் இருந்தால், அங்கிருந்து UK Type C short-stay விசாவுடன் ஐர்லாந்து செல்லலாம். British-Irish Visa Scheme (BIVS) மூலம் இது சாத்தியம்.
4. பெரு (Peru)
180 நாட்கள் வரை தங்கலாம். Machu Picchu, Sacred Valley போன்ற இடங்களை UK விசாவுடன் காணலாம்.
5. மொண்டெனெக்ரோ (Montenegro)
30 நாட்கள் வரை தங்கலாம். இடைக்கால நகரங்கள் மற்றும் கடற்கரை நகரங்களுடன் புகழ்பெற்ற இடம்.
6. பனாமா (Panama)
30 நாட்கள் தங்கலாம். Multiple-entry UK விசா, 6 மாத validity, 500 டொலர் வங்கி இருப்பு, ரிட்டர்ன் டிக்கெட் தேவை.
7. பிலிப்பைன்ஸ் (Philipinnes)
30 நாட்கள் வரை தங்கலாம். ரிட்டர்ன் டிக்கெட், ஹோட்டல் விவரங்கள், பண மதிப்பு ஆவணங்கள் தேவை.
8. ஜார்ஜியா (Georgia)
90 நாட்கள் வரை தங்கலாம். UK விசா அல்லது ரெசிடென்ஸ் பர்மிட் இருந்தால் போதும். Tbilisi, Caucasus மலைகளை இங்கே ரசிக்கலாம்.
9. சிங்கப்பூர் (Singapore)
96 மணி நேரத்திற்குள். Transit மூலமாக மட்டுமே அனுமதி. விசா ஸ்டிக்கர் 30 நாட்கள் Validity இருக்க வேண்டும்.
10. செர்பியா (Serbia)
90 நாட்கள் வரை தங்கலாம். UK விசா குறைந்தது ஒருமுறை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
பயணிகளுக்கான விரைவான குறிப்புகள்:
ரிட்டர்ன் டிக்கெட், ஹோட்டல் புக்கிங், பண மதிப்பு நிரூபணங்களை வைத்திருக்கவும்.
உங்கள் UK விசா ஒருமுறையாவது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய தேவை உள்ள நாடுகள் உள்ளன.
UK விசா செல்லுபடியாக இருக்க வேண்டும்.
பயண விதிமுறைகள் அடிக்கடி மாற்றபடலாம் என்பதால், நீங்கள் செல்லும் நாட்டின் அதிகாரப்பூர்வ துாதரகம்/தளத்தின் வழியாக விவரங்களை உறுதிப்படுத்துங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
countries Indians can visit with UK visa, UK visa free countries for Indians, travel without visa Indian passport UK, Indian passport travel with UK visa, UK visa multiple entry benefits, UK visa travel options 2025, countries allowing entry with UK visa