ரூ.1 லட்சம் கோடிக்கு உள்நாட்டு ஆயுதங்களை வாங்க இந்திய அரசு ஒப்புதல்
ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களை வாங்க இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC), ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான உள்நாட்டு ஆயுதங்களை வாங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Operation Sindoor வெற்றிக்கு பின்னர், இது முதல் மிகப்பாரிய பாதுகாப்பு கொள்முதல் முடிவாகும்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான DAC கூட்டத்தில், 10 முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்களுக்கு “Acceptance of Necessity (AoN)” வழங்கப்பட்டது.
இதில் முப்படைகளும் தேவையான Armoured Recovery Vehicles, Electronic Warfare System, Inventory Management System, Surface-to-Air Missiles உள்ளிட்டவை அடங்கும்.
இந்த உபகரணங்கள், வான்வழி பாதுகாப்பு, அசைவு திறன் மற்றும் சப்ளைச் செயின் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்தும்.
மேலும், கடல் கண்ணிவெடிகள் (Moored Mines), கண்ணிவெடி தடுப்பு கப்பல்கள், Super Rapid Gun Mount மற்றும் நீர்மூழ்கி தன்னாட்சி கப்பல்கள் ஆகியவையும் ஒப்புதலுக்குட்பட்டுள்ளன.
இதனால் கடற்படை மற்றும் வர்த்தக கப்பல்களுக்கு உள்ள ஆபத்துகளை குறைக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்புதலுகள் அனைத்தும் Buy (Indian-IDDM) பிரிவின் கீழ் வழங்கப்பட்டு, உள்நாட்டுப் பரிணாமம் மற்றும் வடிவமைப்புக்கு ஆதரவு அளிக்கின்றன.
இது, இந்திய ஆயுத உற்பத்தியில் ஆதிக்கம் வளர்க்கும் மற்றும் தன்னிறைவு நோக்கை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indian Defence Deal 2025, Made in India arms purchase, Defence Acquisition Council AoN, Operation Sindoor impact, Rajnath Singh defence news, Indigenous missile system India, Indian Navy mine counter vessels, Submersible autonomous vessels India, Electronic warfare Indian Army, Rs 1 lakh crore defence approval