F-35B விமானத்தை சரி செய்வதில் சிக்கல்., மற்றொரு விமானத்தில் பிரித்தானியாவிற்கு ஏற்றிச்செல்ல முடிவு
கேரளாவில் பழுதான நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் F-35B விமானத்தை மற்றொரு விமானத்தில் ஏற்றிச்செல்ல பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த ஜூன் 14-ஆம் திகதி அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் Royal Navy-யின் F-35B ஸ்டெல்த் போர் விமானம், தற்போது அந்த இடத்திலேயே பழுது காரணமாக தேங்கி உள்ளது.
தற்போது, இந்த ஜெட் விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
CNN-News18 வெளியிட்ட அரசு வட்டார தகவலின்படி, பிரித்தானிய இந்த விமானத்தை மற்றொரு பாரிய விமானத்தின் உதவியுடன் திரும்ப எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது.
இதற்கான அனைத்து செலவுகளையும், அதாவது ஏர்போர்ட் பார்க்கிங் கட்டணம், ஹேங்கர் கட்டணம் உள்ளிட்டவை அனைத்தையும் பிரித்தானிய அரசு செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ANI செய்தி நிறுவனத்துக்கு தகவல் அளித்த இந்திய அதிகாரி ஒருவர், “UK F-35B ஜெட் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதை மெயின்டனன்ஸ், ரிப்பேர் மற்றும் ஓவர்ஹால் (MRO) மையத்திற்கு நகர்த்தும் முன்வைத்த இந்தியாவின் ஒப்புதலை பிரித்தானியா ஏற்றுள்ளது,” என கூறியிருந்தார்.
இந்த விமானத்தை ஏற்றி கொண்டு செல்வதற்கான பிரித்தானியாவின் தொழில்நுட்ப குழு மற்றும் சிறப்பு கருவிகள் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், மூன்று வாரங்கள் கழித்து F-35B ஜெட்டை திரும்பக் கொண்டு செல்வதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெறவுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |