இஸ்ரேல்- லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல் லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம்
இஸ்ரேல் - லெபனான் இடையே தற்காலிகமாக 10 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக் கொண்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் - லெபனான் இடையிலான ஒப்பந்தம் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 2.30 மணிக்கு அமலுக்கு வந்துள்ளது.
போர் நிறுத்தத்தை வரவேற்கும் விதமாக பெய்ரூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மேலும் இது பிராந்தியத்தில் அமைதி ஏற்பட உதவும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இரண்டு நாட்டு தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |