நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ பிரித்தானிய நிபுணர்கள் கூறும் 10 எளிய ஆலோசனைகள்: பாகம் ஒன்று

United Kingdom Exercise
By Balamanuvelan Jan 25, 2022 08:22 AM GMT
Report

அமேஸான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் மனித உடலிலுள்ள பழைய செல்களை நீக்கி புது செல்களை உருவாக்கி, மனிதனை நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வைக்கும் முயற்சியாக, அறிவியலாளர்களைக் கொண்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டுவருகிறாராம்.

அவரது திட்டம் எப்போது நடைமுறைக்கு வருமோ தெரியாது... ஆனால் ஏற்கனவே பல அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், நமது வாழ்நாளை அதிகரிக்க, ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ எளிமையான பல வழிகள் உள்ளன.

அவ்வகையில், நீண்ட காலம் இளமையாக வாழ்வது தொடர்பாக பிரித்தானிய நிபுணர்கள் சிலர் அளித்த 10 பயனுள்ள எளிய ஆலோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1. உணவுக்கட்டுப்பாட்டை விட உடற்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுங்கள்

ஆரோக்கியமான வகையில் வயது முதிர்ச்சியடைவதற்கு, ஒல்லியாக, ஃபிட்டாக இல்லாமல் இருப்பதைவிட, சற்று அதிக எடையுடனும், ஃபிட்டாகவும் இருப்பது நல்லது என்கிறார், லண்டன் King’s College பேராசிரியரான Stephen Harridge.

உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வதை விட, உடலின் தசைகள் இயக்கத்திலிருப்பது, தசைகளை வலுவாக்க உதவுவதுடன், வயதாக ஆக, இரண்டாம் வகை நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதையும் தடுக்கும்.

உடற்பயிற்சியின்போது, உடலிலுள்ள குளூக்கோஸை எடுத்துக்கொள்ளும்படி தசைகளை இன்சுலின் தூண்டுகிறது. ஆகவே, உடலிலுள்ள சர்க்கரை பயன்படுத்தப்படுவதுடன், தசையிலுள்ள கொழுப்பு அமிலங்கள் இன்சுலின் செயல்படுவதைத் தடுக்காமலும் இருக்கும்.

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ பிரித்தானிய நிபுணர்கள் கூறும் 10 எளிய ஆலோசனைகள்: பாகம் ஒன்று | 10 Effortlessly Simple Tricks Stay Healthier Longe

2. ஏரோபிக்ஸ், நீச்சல், ஜாகிங், வேகமான நடைப் பெயிற்சி மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களால் ஏற்படும் நன்மைகள்

மேற்கூறிய ஏரோபிக்ஸ் முதலான உடற்பயிற்சிகள், நமது இதய நலனுக்கும் சுவாச மண்டலத்திற்கும் மிகவும் பயனுள்ளவை ஆகும். ஏரோபிக்ஸ் மேஜிக் போல எதையோ செய்கிறது என்கிறார் சர்ரே பல்கலை பேராசிரியரான David Russell-Jones.

அது, இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரித்து இதயத்தைக் காக்கிறது.

அத்துடன், நடைப்பயிற்சியும் மிகச் சிறந்தது. ஒரு நாளைக்கு 15 நிமிட நடைப்பயிற்சி கூட பயனளிக்கும். ஆனால், சமமான பரப்பில் நடைப் பயிற்சி செய்வதை விட, மலைகள் போன்ற இடங்களில், மேலும் கீழும் நடப்பது மிகவும் சிறந்ததாகும்.

3. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரத்த அழுத்தத்தை சோதியுங்கள்

பிரித்தானியாவைப் பொருத்தவரை, பல மில்லியன் மக்கள் தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியாமலே இருக்கிறார்கள். இதனால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தாக்க வாய்ப்புள்ளது.

ஆகவே, அடிக்கடி மக்கள் தங்கள் இரத்த அழுத்தத்தை சோதிப்பது அவசியம் என்கிறார் லீட்ஸ் பல்கலை பேராசிரியர் Chris Gale. நீங்கள் உங்கள் 50 வயதுகளில் இருப்பீர்களானால், மூன்று முதல் ஆறு மாதங்களுக்கொருமுறை உங்கள் இரத்த அழுத்தத்தை சோதிப்பது நல்லது என்கிறார் அவர்.

4. வாரம் ஒரு முறை நாடித்துடிப்பை சோதியுங்கள்

சீரற்ற நாடித்துடிப்பு, atrial fibrillation (AF) என்னும் பிரச்சினைக்கு அடையாளமாக இருக்கலாம் என்கிறார் Bristol Heart Institute இதயவியல் நிபுணரான Dr Glyn Thomas.

இதனால், பக்கவாதம் ஏற்படும் அபாயம் ஐந்து மடங்கு அதிகம் என்கிறார் அவர். அதை நீங்களே செய்யலாம் என்று கூறும் Thomas, எத்தனை முறை துடிக்கிறது என்பது அல்ல, எப்படி துடிக்கிறது, அதாவது சீராக துடிக்கிறதா என்பதைக் கவனியுங்கள் என்கிறார் அவர்.

5. ஒரு காஃபி பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள்

பொதுவாக, மக்கள், காஃபி இரத்த அழுத்தத்தை சற்று அதிகரிப்பதால், அது இதயத்திற்கு நல்லதல்ல என்று நினைக்கிறார்கள். ஆனால், அதே காஃபியை, கொஞ்சமாக குடிப்பது கொலஸ்ட்ரால் பிரச்சினைக்கு நல்லது என்கிறார் Dr Thomas.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கப் காஃபி வரை அருந்துவது மாரடைப்பு மற்றும் பக்கவாதப் பிரச்சினைகளை குறைக்கும் என்கிறது 2020ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட Budapest பல்கலையின் ஆய்வு ஒன்று.

நான் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் காஃபி அருந்துகிறேன், அது எனது மன அழுத்தம் குறையவும் உதவுகிறது என்கிறார் Dr Thomas.  

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ பிரித்தானிய நிபுணர்கள் கூறும் 10 எளிய ஆலோசனைகள்: பாகம் ஒன்று | 10 Effortlessly Simple Tricks Stay Healthier Longe

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US