நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ பிரித்தானிய நிபுணர்கள் கூறும் 10 எளிய ஆலோசனைகள்: பாகம் இரண்டு

Health United Kingdom
By Balamanuvelan Jan 26, 2022 06:25 AM GMT
Report

நீண்ட காலம் இளமையாக வாழ்வது தொடர்பாக பிரித்தானிய நிபுணர்கள் சிலர் அளித்த 10 பயனுள்ள எளிய ஆலோசனைகளில் முதல் ஐந்தை நேற்று பார்த்தோம்.

இன்று மீதமுள்ள ஐந்து ஆலோசனைகளைப் பார்க்கலாம்...

(இந்த ஆலோசனைகள் நம்மவர்களுக்கு எந்த அளவுக்கு பொருந்தும் என்று சொல்லமுடியாது, ஏனென்றால், அவை பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்டவை)

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ பிரித்தானிய நிபுணர்கள் கூறும் 10 எளிய ஆலோசனைகள்: பாகம் ஒன்று

6. அவ்வப்போது கணவரை, (அல்லது மனைவியை) கட்டியணைத்து முத்தம் ஒன்றைக் கொடுக்கலாம்

கணவரை, (அல்லது மனைவியை), அதாவது உங்களுக்குத் திருமணமாகியிருந்தால், கட்டியணைத்து முத்தமிடுவது இரத்த அழுத்தத்தை குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம் கணவன் மனைவிக்கிடையிலான பிணைப்பைத் தூண்டும், மூளையிலிருந்து உருவாகும் oxytocin என்னும் ரசாயனம், இரத்த நாளங்களை விரிவாக்கவும் உதவுவதால்தான்.

கணவர் அல்லது மனைவியுடன் வலிமையான பிணைப்பு கொண்டவர்கள் பல வழிகளில் ஆரோக்கியமாக வாழ்கிறார்களாம். குறிப்பாக, அவர்களது இதய நலன் சிறப்பாக உள்ளதாம். 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று, மகிழ்ச்சியான திருமண வாழ்வு வாழும் ஆண்களுக்கு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதாகவும், அவர்களுக்கு இதயப் பிரச்சினைகள் வரும் அபாயம் குறைவு என்றும் கண்டறிந்துள்ளது.

அத்துடன், 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட Michigan மாகாண ஆய்வு ஒன்று, தம்பதியர் ஒழுங்காக தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வது, இருவரது இதயத்துக்கும் நல்லது என்றும், மாரடைப்பு வரும் அபாயத்தை அது குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளது.

அதேபோல, உங்கள் இதயம் ஆரோக்யமாக இருப்பது, உங்கள் தாம்பத்ய வாழ்க்கைக்கு நல்லது என்றும் கூறுகிறார் Warwickshire மருத்துவர் Dr Jeff Foster.

7. மாமிச உணவைத் துறக்கவேண்டிய கட்டாயம் இல்லை

Red meat என்று அழைக்கப்படும், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்றவை saturated fat என்னும் கொழுப்பு அதிகம் உள்ளவை என்பதால், அவை இதய பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வருகின்றன. ஆனால், அதை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம், அவற்றில் திசுக்கள் பழுதடைந்தால் அவற்றை சரி செய்ய உதவும் அமினோ அமிலங்களும் இரும்புச்சத்தும் அதிக அளவில் உள்ளன.

ஆக, குறைவான மாமிசம், அதிக மீன், பருப்புகள் போன்ற தாவர உணவுகள், ஏராளம் பழங்கள் காய்கறிகள் மற்றும் முழுத் தானியங்கள் எடுத்துக்கொள்வது நலம் பயக்கும் என்கிறார் லண்டனின் இதயவியல் நிபுணராக இருக்கும் பேராசிரியர் Charles Knight.

8. நின்றபடி வேலை செய்ய வாய்ப்பிருந்தால் செய்யுங்கள்

நின்றபடி வேலை செய்வது இதயத்துக்கு நல்லது என்கிறார் Dr Thomas. நாம் உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தாலுமே, நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது இதயப் பிரச்சினைகள் முதல் பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமையலாம் என்கிறது 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று.

9. ஒரு மணி நேரத்திற்கொரு முறை நடப்பது நல்லது

இது எத்தனை பேருக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. என்றாலும், வாரத்தில் சில நாட்கள் மட்டும் கடினமாக உடற்பயிற்சி செய்வது நல்லதுதான் என்றாலும், ஒரு நாளில் மணிக்கொரு முறை சிறிது நடப்பது மிகவும் நல்லது என்கிறார் லண்டன் Imperial கல்லூரி பேராசிரியரான Sanjay Prasad.

நான், ஒரு மணி நேரத்திற்கொருமுறை, அலாரம் வைத்து, நான் வேலை செய்யும் இடத்திலேயே 120 அடிகள் நடக்கிறேன் என்கிறார் அவர்.

10. தினமும் சுடுதண்ணீரில் குளிப்பது நல்லது

சுடுதண்ணீர் இரத்த நாளங்கள் விரிவடைய உதவுமாம். அதனால் இரத்த அழுத்தம் குறையும் என்கிறார் பர்மிங்காம் பல்கலை மருத்துவமனை இதயவியல் நிபுணரான Jerome Ment.

அத்துடன், மன அழுத்தத்தைக் குறைக்கவும் சுடுதண்ணீர்க் குளியல் மிகவும் சிறந்தது என்கிறார் அவர்.

2020ஆம் ஆண்டு, ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சுடுதண்ணீரில் குளித்துவந்தவர்களின் உடல் நலனை ஆரய்ந்தபோது, வாரத்தில் இரண்டு முறை சுடுதண்ணீர்க் குளியல் போட்டவர்களை விட தினமும் குளித்தவர்களுக்கு பக்கவாதம் வரும் அபாயம் 26 சதவிகிதம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Atchuvely, கொழும்பு

16 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US