பலியான 10 லட்சம் வீரர்கள்…உக்ரைன் போரில் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை
உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை 10,61,350 பேரை ரஷ்ய தரப்பு இழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் திகதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.
இந்த போர் நடவடிக்கையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதுடன் லட்சக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ரஷ்ய படைகள் உக்ரைனிய எல்லைக்குள் தீவிரமாக நுழைந்தாலும், உக்ரைனிய படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கைகோர்த்த வடகொரிய படை
ரஷ்ய படைகளின் பின்னடைவை சரிசெய்யும் நோக்கில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் கைகோர்த்து உக்ரைன் ரஷ்யா போருக்கான புதிய திட்டத்தை வகுத்தார்.
அதன்படி, வட கொரிய கூலிப்படை வீரர்கள் ரஷ்யா சார்பாக களமிறங்கிய உக்ரைனுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டு வருகிறது.
Russian/North Korean losses, 24 Feb 2022–8 Aug 2025:
— Michael MacKay (@mhmck) August 8, 2025
1061350 personnel
11083 tanks
23102 APV
31232 artillery systems
1456 MLRS
1203 air defence systems
421 aircraft
340 helicopters
50168 UAVs
3555 cruise missiles
28 ships/boats
1 submarine
57731 vehicles
3936 special equipment pic.twitter.com/8aKULpfU7p
ரஷ்யா மற்றும் வட கொரிய கூலிப்படை இழப்புகள்
போர் தொடங்கிய 24.02.2022 முதல் 8.8.2025 வரையில் உக்ரைனிய படைகளின் தாக்குதலில் கிட்டத்தட்ட 10,61,350 ரஷ்ய மற்றும் வட கொரிய கூலிப்படை வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது.
மேலும், 11083 டாங்கிகள், 23102 APV, 31232 பீரங்கி அமைப்புகள், 1456 MLRS, 1203 வான் பாதுகாப்பு அமைப்புகள், 421 விமானங்கள், 340 ஹெலிகாப்டர்கள், 50168 UAVகள், 3555 கப்பல் ஏவுகணைகள், 28 கப்பல்கள்/படகுகள், 1 நீர்மூழ்கிக் கப்பல், 57731 வாகனங்கள், 3936 சிறப்பு உபகரணங்கள் ஆகியவற்றை போரில் ரஷ்ய தரப்பு இழந்து இருப்பதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில்…
கடந்த சில நாட்களில் மட்டும் ரஷ்யா மற்றும் வட கொரிய கூலிப்படைகள் குறிப்பிடத்தக்க இழப்பை சந்தித்துள்ளனர்.
தரவுகளின் படி, 1040 பேர் கொல்லப்பட்டோ அல்லது படுகாயமடைந்தோ உள்ளனர்.
மேலும் 7க்கும் மேற்பட்ட டாங்கிகள், கவசப் பணியாளர் வாகனங்கள், 52 பீரங்கி அமைப்புகள், +238 செயல்பாட்டு-தந்திரோபாய UAVகள், +126 வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |