ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் த்ரெட்ஸ்: 10 முக்கிய ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்
மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தியுள்ள த்ரெட்ஸ் சமூக செயலிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கின் ட்விட்டர் செயலிக்கும் இடையே உள்ள ஒற்றுமை மற்றும் வேறுபாடுகள் என்ன என்பதை இந்த செய்தி வெளிக்காட்டுகிறது.
த்ரெட்ஸ் செயலுக்கு எதிராக ட்விட்டர் வழக்கு
எலான் மஸ்க்கின் ட்விட்டர் செயலிக்கு போட்டியாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் “த்ரெட்ஸ்”(Threads app)என்னும் சமூக செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தார்.
இந்த த்ரெட்ஸ் செயலி ட்விட்டரின் தனித்துவமான அம்சங்களை அப்படியே பிரதிபலிப்பதாக குற்றம்சாட்டி ட்விட்டர் நிறுவனத்தின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்-கிற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதம் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.
Daily MailCompetition is fine, cheating is not
— Elon Musk (@elonmusk) July 6, 2023
அத்துடன் ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணியில் அமர்த்தி ட்விட்டர் நிறுவனத்தின் வர்த்தக விபரங்கள் மற்றும் அறிவுசார் சொத்துகளை மெட்டா நிறுவனம் திருடி விட்டதாகவும் ட்விட்டர் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் பதிவிட்டுள்ள கருத்தில், “போட்டி நல்லது, ஆனால் ஏமாற்றுவது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் தகவல் படி “த்ரெட்ஸ்” சமூக செயலியில் இதுவரை 30 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reuters
ஒற்றுமை மற்றும் வேறுபாடுகள்
* ட்விட்டர் பதிவு ஒன்றில் அதிகபட்சமாக 280 எழுத்துக்கள் பயன்படுத்த முடியும்- த்ரெட்ஸ் பதிவில் அதிகபட்சமாக 500 எழுத்துக்கள் பயன்படுத்தலாம்.
* ட்விட்டர் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய இரண்டு சமூக செயலிகளிலும் லிங்க்-கை உள்ளீடு செய்ய முடியும்.
* ட்விட்டர் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய இரண்டு செயலிகளிலும் பகிரப்படும் பதிவுகளில் புகைப்படங்களை இணைத்து கொள்ளும் வசதி உள்ளது.
* ட்விட்டரில் 2 நிமிடம் 20 வினாடிகள் அளவு கொண்ட வீடியோக்கள் பதிவிட முடியும், ஆனால் த்ரெட்ஸ் செயலியில் 5 நிமிடங்கள் கொண்ட வீடியோவை பதிவிடலாம்.
* ட்விட்டரில் சரிபார்ப்பு குறியீடு வழங்கப்படவில்லை, இன்ஸ்டாகிராம் மூலம் த்ரெட்ஸ் செயலி கணக்குகளுக்கு சரிபார்ப்பு குறியீடு வழங்கப்படுகிறது.
* இரண்டு செயலிகளிலும் டெலிட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
* இரண்டு செயலிகளிலும் எடிட் செய்யும் வசதி கொடுக்கப்படவில்லை.
* ட்விட்டரில் நேரடியாக மெசேஜ் செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் த்ரெட்ஸ் செயலியில் நேரடியாக மெசேஜ் செய்யும் அம்சம் வழங்கப்படவில்லை.
* ட்விட்டர் ட்ரெண்டிங் செய்திகள் என்ற அம்சத்தை கொண்டுள்ளது, ஆனால் த்ரெட்ஸ் செயலியில் ட்ரெண்டிங் செய்திகள் என்ற அம்சம் வழங்கப்படவில்லை.
* ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் மிகவும் பிரபலமானவை, ஆனால் அந்த அம்சமும் த்ரெட்ஸ் செயலியில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |