அமெரிக்காவின் வெறிச்செயலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி! இரத்தமும் சதையுமாக கிடந்த கொடூரம்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் உயிரிழந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருக்கும் ஏராளமான மக்கள் வெளியேறிவிட்டனர். இதற்கிடையில் காபூல் விமானநிலையத்திற்கு வெளியே ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதில் 12 அமெரிக்க படை வீரர்கள் உயிரிழந்தனர். இது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு நிச்சயம் ஐஎஸ் இயக்கத்திற்கு பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை காபூல் விமானநிலையத்திற்கு வெளியே கார் ஒன்று சுற்றிக் கொண்டே இருந்ததால், இதில் சந்தேகமடைந்த அமெரிக்கா, அதில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தீவிரவாதி இருக்கலாம் என்று குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதில் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்ததிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியிருப்பது உறுதியாகியுள்ளது.
தொண்டு நிறுவன ஊழியராக இருக்கும் Zamarai Ahmadi-ன் மகள்களான Zamir(20) Faisal (16) மற்றும் Farzad(12) ஆகியோரும், மகன்களின் ஒருவரான Samim Ahmadi(22)-யும் இதில் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினரான Ramin பிரபல ஆங்கில ஊடகமான பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், இது மிகவும் தவறான ஒன்று, மிருகத்தனமான தாக்குதல், தவறான தகவலின் அடிப்படையில் நடந்துள்ளது.
இதில், எங்கள் குடும்ப உறுப்பினரான Emal Ahmadi-யின் அவரது இரண்டு வயது மகள் Sumaya பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விமான நிலையத்திற்கு செல்வதற்காக அனைவரும் காத்திருந்த போது, இந்த தாக்குதல் நடந்துவிட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாக அண்டை வீட்டுக்காரர் Abdul Matin Azizi வாஷிங்டன் போஸ்ட்டிடிற்கு கூறியுள்ளார்.
மேலும், அவர் நான் உதவ ஓடிய போதும், துரதிர்ஷ்டவசமாக யாரையும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. உடல்கள் சிதறி கிடந்தன, இறந்த குழந்தைகள் காரின் உள்ளே இருந்தாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தாலிபான்கள் மற்றும் அல்கொய்தாவை கொல்வதாக எப்போதும் கூறுகிறது. ஆனால் அவர்கள் பொதுமக்கள் மற்றும் அப்பாவி குழந்தைகளையே கொல்லுகின்றனர் என்று இறந்தவர்களின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.