ஒரு நாளில் 10 மில்லியன்; கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மின்னல் வேக YouTube சாதனை!
கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் தனது அபரிமிதமான உலகளாவிய செல்வாக்கை நிரூபித்துள்ளார்.
ஒரு நாளில் 10 மில்லியன்
ரொனால்டோ தனது யூடியூப் சேனலான UR கிறிஸ்டியானோவை ஆகஸ்ட் 21 புதன்கிழமை தொடங்கினார். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களை உடனடியாகக் கவர்ந்தார்.
அவரது முதல் வீடியோவாக, நண்பரான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடனான வேடிக்கையான வினா விடை போட்டியை நடத்தியுள்ளார்.

ஒரு வியக்கத்தக்க சாதனையாக, ரொனால்டோவின் சேனல் 90 நிமிடங்களுக்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான subscribers ஐ பெற்றது.
வெறும் ஆறு மணி நேரத்திற்குள், சேனலின் subscribers எண்ணிக்கை 6 மில்லியனைத் தாண்டியது, மேலும் நாள் முடிவில் அது 10 மில்லியனைத் தாண்டியது.
ரொனால்டோவின் சேனல், தற்போது கிட்டத்தட்ட 12 மில்லியன் subscribers பெற்றுள்ளது. இது விரைவான வேகத்தில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
கால்பந்து ஜாம்பவான் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க சமூக ஊடகங்களில் படங்களை பகிர்ந்து வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |