மருத்துவமனை தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 10 பிஞ்சு குழந்தைகள்: இந்தியாவில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
இந்தியாவில் ஒரு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாகப் பிறந்த பத்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் உள்ள பாந்தரா மாவட்ட அரசு மருத்துவமனையில், சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் 1.30 மணிக்கு செவிலியர் ஒருவர் முழித்து பார்க்கையில், புதிதாக நோய்வாய்ப்பட்டு பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவின் (Sick Newborn Care Unit) அறையிலிருந்து புகை வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பதைபதைத்துக்கொண்டு உடனடியாக அறைக்குள் சென்ற அவரால் உள்ளே இருக்கும் எதையும் புகைக்கு நடுவில் பார்க்க முடியவில்லை. மேலும் மூச்சு திணறி வெளியே ஓடிவந்த அவர், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த அதிகாரிகள் அந்த வார்டில் இருந்த 17 குழைந்தைகளை மீட்க்கும் முயற்சியில் இறங்கினர்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை தீயை அணைத்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சற்று நேரத்தில் அனைத்து குழந்தைகளும் மீட்கப்பட்டன.
இதில் அந்த மருத்துவமனையிலேயே பிறந்து In-born wardல் இருந்த 7 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆனால், வேறு மருத்துவமனைகளில் பிறந்து, இங்கு உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைக்கு வந்த Out-born wardல் இருந்து மீட்கப்பட்ட 10 குழைந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை.
அதில் 3 குழந்தைகள் தீயில் கருகியும், 7 குழந்தைகள் கடுமையான புகையில் மூச்சு திணறி பரிதாபமாக இறந்துவிட்டன. பின்னர், குழந்தைகள் அதன் பெற்றோர்களால் அடையாளம் காணப்பட்டு, மேற்பட்ட நடைமுறைகள் தொடங்கட்டன.
பத்திரமாக மீட்கப்பட்ட 7 குழந்தைகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், மகாராஷ்டிர மாநில அரசு உயிரிழந்த குழைந்திகளின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டு தொகை அறிவித்துள்ளது.
மருத்துவமனையில் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை, குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

