10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படாதது ஏன்?
இன்று தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம்போல, மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை. அதற்கு பதிலாக எந்தெந்த மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்னும் விவரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) May 10, 2024
மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்!
குறைவான மதிப்பெண்…
சில தகவல்கள்
மாணவ மாணவியருக்கிடையே தேவையற்ற போட்டி உருவாவதைத் தவிர்ப்பதற்காகவே, அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவ மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படவில்லை என தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள மாவட்டங்கள்
- அரியலூர் 97.31 %
- சிவகங்கை 97.02 %
- ராமநாதபுரம் 96.36 %
- கன்னியாகுமரி 96.24 %
- திருச்சி 95.23 %
- விருதுநகர் 95.23 %
- ஈரோடு 95.08 %
- பெரம்பலூர் 94.77 %
- தூத்துக்குடி 94.39 %
- விழுப்புரம் 94.11 %
ரிசல்ட் வருவதற்கு முன்பே உயிரிழந்த மாணவர்
சென்னையிலுள்ள மதுரவாயல் என்னுமிடத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவரான ஜீவா என்பவர், ரிசல்ட் வருவதற்கு முன்பே, இன்று காலை இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, லாரி மோதி உயிரிழந்ததால்,அவரது குடும்பத்தினர் மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |