ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க செய்ய வேண்டிய 10 விடயங்கள்: என்னென்ன தெரியுமா?
தற்போது பெரும்பாலான நபர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள், மன அழுத்தம், மாத்திரைகளின் பக்கவிளைவுகள் என உடல் எடைக்கு பல காரணங்கள் உண்டு.
அந்தவகையில், தொங்கும் தொப்பையை குறைக்க செய்ய வேண்டிய 10 விடயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
என்னென்ன செய்யவேண்டும்?
1. கலோரி பற்றாக்குறை: தினமும் உட்கொள்ளும் கலோரிகளை விட அதிக கலோரிகளை எரிக்க வேண்டும்.
2. முழு உணவுகள்: லீன் புரோட்டீன்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்களில் கவனம் செலுத்த வேண்டும்.
3. புரோட்டீனை அதிகரிக்கவும்: புரோட்டீனை அதிகம் எடுப்பது பசியைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது மற்றும் தசைகளின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.
4. கார்டியோ பயிற்சி: வாரத்திற்கு 1-2 முறை 30-60 நிமிடங்கள் கார்டியோ பயிற்சிகளை செய்ய வேண்டும்.
5. வலிமை பயிற்சி: வாரத்திற்கு 2-3 முறை உடம்பில் தேங்கியுள்ள கொழுப்புக்களை எரிப்பதற்கும், தசைகளின் வளர்ச்சிக்கும் வலிமை பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
6. தூக்கத்திற்கு முன்னுரிமை: தினமும் 7-9 மணிநேரம் அவசியம் தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
7. மன அழுத்தத்தை குறைக்கவும்: மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் அளவைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
8. நீரேற்றம்: தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தின் சிறந்த நண்பன். எனவே நீரை அதிகம் பருக வேண்டும்.
9. மதுவை தவிர்க்கவும்: வெற்று கலோரிகளை அறவே தவிர்க்க வேண்டும்.
10. முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்: உணவு, உடற்பயிற்சி மற்றும் உடல் அளவீடுகளில் பொறுப்புடன் இருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |