10 வாரங்கள் மட்டுமே தாக்குபிடிக்கும் உலகின் கோதுமை கையிருப்பு: ஐ.நா-வில் சாரா மெங்கர் எச்சரிக்கை!
உலகின் மொத்த கோதுமை வழங்கல் கையிருப்பு 10 வார காலங்களுக்கு மட்டுமே இருப்பதாக விவசாய பகுப்பாய்வு நிறுவனமான க்ரோ இண்டலிஜென்ஸின் CEO சாரா மெங்கர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது கிட்டத்தட்ட மூன்று மாதங்களை நிறைவு செய்யவிருக்கும் நிலையில், உலக அளவில் மிகப்பெரிய உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உலகின் முன்றில் ஒருபங்கு கோதுமை உற்பத்தியை கொண்டுள்ள ரஷ்யா மற்றும் உக்ரைனின் இந்த போர் நடவடிக்கை மற்றும் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடை ஆகிய காரணங்களால் உலக அளவில் கோதுமை மற்றும் உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.
The world has about 10 weeks of wheat supplies stored
— NEXTA (@nexta_tv) May 25, 2022
"We currently only have 10 weeks of global consumption sitting in inventory around the world. Conditions are worse than those experienced in 2007 and 2008,"said Sara Menker, CEO of agriculture analytics firm Gro Intelligence. pic.twitter.com/rRiSajPey8
இந்தநிலையில், கோதுமை கையிருப்பு தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய விவசாய பகுப்பாய்வு நிறுவனமான ”க்ரோ இண்டலிஜென்ஸின்” தலைவர் சாரா மெங்கர், உலகின் தற்போதைய மொத்த கோதுமை வழங்கல் கையிருப்பு வெறும் 10 வாரங்கள் என்ற அளவிற்கு மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவை கடந்த 2007 மற்றும் 2008ம் ஆண்டின் நிலைமையை காட்டிலும் தற்போதைய நிலைமை மிகவும் கடுமையானதாக உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கடுமையான நிலைமைக்கு உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கைகள் மட்டும் காரணம் இல்லை என்றாலும், அவை எரிகிற விளக்கில் எண்ணெய் ஊற்றியுள்ளது என்பது இவற்றில் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: குவாட் உச்சிமாநாட்டின் போது...ஜப்பான் வான்பரப்பில் கூட்டாக பறந்த சீன, ரஷ்ய போர் விமானங்கள்!
அதேசமயம் உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் உணவு பொருள்கள் ஏற்றுமதியை உலக நாடுகள் தொடரவேண்டும் என்றால் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்கவேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் மறுத்து இருப்பது குறிப்பிடதக்கது.