அழகிய இளம்பெண்ணைக் கடித்துக் குதறிய 10 நாய்கள்: அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிப்போன முகம்
ரஷ்யாவில் அழகிய இளம்பெண் ஒருவரை 10 நாய்கள் சேர்ந்து கடித்துக் குதறியதால், அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.
நேற்று Tatyana Loskutnikova (20) என்ற அழகுக் கலை நிபுணரான இளம்பெண் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, 10 நாய்களால் தாக்கப்பட்டார்.
அவரது உடைகளை கடித்துக் குதறிய நாய்கள், எலும்பு தெரியும் அளவுக்கு அவரைக் குதறியுள்ளன.
அவரது கண்ணிமைகளை நாய்கள் கடித்து தின்றுவிட்டதால், அவரது கண்கள் மூடமுடியாதபடி திறந்தே உள்ளன.
நாய் குலைக்கும் சத்தமும், ஒரு பெண் அலறும் சத்தமும் கேட்டு ஓடிவந்த Alexandra Andreevna என்ற பெண், ஒரு குச்சியை எடுத்து நாய்களைத் துரத்த, வேறொரு நபரும் உதவிக்கு வந்திருக்கிறார்.
ஒரு பொலிசாரும் உதவிக்கு வர, அவர் மீதும் நாய் பாய, அவர் அந்த நாயை சுட்டுக்கொன்றுள்ளார்.
உடலில் ஒட்டுத்துணியின்றி, உறையவைக்கும் குளிரில், நாய் கடிக்கும்போது கத்தக் கூட சக்தியில்லாமல் கிடந்த Tatyanaவை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.
ஆனால், வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் அவர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொலிசார் அந்த 10 நாய்களையும் சுட்டுக்கொன்றுள்ளார்கள்.
அழகியல் நிபுணரான ஒரு பெண், முகமே அடையாளம் தெரியாத அளவு நாய்களால் கடித்துக் குதறப்பட்ட சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




