சீமான் பேச்சுக்கு வழக்கு தொடர்வதாக இருந்தால் 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும்: நீதிபதி கருத்து
சீமான் பேச்சுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீதிபதி கருத்து
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதித்துறையை அவமிதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, நீதிபதிகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் நீதிபதி ஒருவர் கூறுகையில், ", சீமான் பேச்சுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும்" என்றார்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக சீமான் பேச்சை நீங்கள் கேட்கவில்லையா என்று மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், சீமான் பேசுவதை இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கில் சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |